Header Ads



அல்குர்ஆனை வைத்து வாக்குக்கேட்ட அமைச்சர்..!

(Thoo) காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் குர்ஆன்  வைத்து ஓட்டு கேட்ட சம்பவம், தற்போடு அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் சகினா ஐட்டூ. வருகிற மக்களவை தேர்தலை முன்னிட்டு இவர் குர்ஆன்னை வைத்து சத்தியம் கேட்டு ஓட்டு சேகரிப்பதை காட்டும் வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

3.11 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் திருமதி.ஐட்டூ ஒரு முதியவரிடம் “நான் உங்களது மகள் போன்றவள். எனவே கடந்த தேர்தலில் ஆதரவு அளித்தது போல இந்த தேர்தலிலும் எங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்கும் படி புனிதமான குர்ஆன்  மீது சத்தியம் செய்து கொடுங்கள்” என்று கேட்பது இடம்பெற்றுள்ளது. உடனடியாக அந்த முதியவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து ஆதரவை உறுதி செய்யும் காட்சியும் அவ்வீடியோவில் உள்ளது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ குறித்து “இதில் தவறாக ஏதும் இல்லை. இது நமது பண்பாட்டின் ஒரு பகுதியாகும். தேர்தல் நடத்தை விதிகள் வகுக்கப்படுவதற்கு முன்னரே இது நடந்து முடிந்து விட்டது” என்று அம்மாநில ஆளும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லா தனது வலைத்தளத்தில் “நான் இது குறித்து சகினாவுடன் பேசினேன். அப்போது அவர் இவ்வீடியோ கடந்த மாதம் அதாவது நடத்தை விதிகள் வகுக்கப்படும் முன் எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும் இக்காட்சியில் அவர் யாரையும் ஏமாற்றவுமில்லை. மிரட்டவுமில்லை. வயதான நபர் ஒருவரை எங்களது கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்று அன்புடன் தான் கேட்கிறார். எங்கள் மீது குற்றம் சுமத்துவது எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட சதியாகும். தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளை திசைதிருப்பும் நோக்குடன் அவர்கள் செயல்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.