Header Ads



அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் தலைவர் ஒருவர் தேடப்படுகிறார்..!

அண்மையில் இடம்பெற்ற மேல் மற்றும் தென்மாகாண சபை தேர்தலின் மூலம் இலங்கையின் எதிர்காலம் தொடர்பிலான வெளிப்பாடுகள் புலப்படுவதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முறை இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த இரு மாகாண சபை தேர்தலுடன் ஒப்பிடும் போது அரசாங்கத்திற்கு பெருவாரியான ஆசனங்கள் குறைவடைந்துள்ளமையையும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள வாக்கு வீழ்ச்சி குறித்து விசேடமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் ஹிந்து நாளிதழ் தமது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் தென்மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தென்மாகாணத்தில் வாக்குகள் அதிகரித்து காணப்பட்டாலும், கொழும்பில் அந்த கட்சிக்கு வாக்குகள் குறைவடைந்துள்ளமையையும் அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா பெற்றுக் கொண்ட வாக்குகள் தொடர்பிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்காளர்கள், அரசாங்கத்திற்கு சவால்விடுக்கும் தலைவர் ஒருவரை எதிர்கட்சியில் இருந்து தேடுவதாகவும் அந்த நாளிதழ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. Sfm

No comments

Powered by Blogger.