கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி மாணவர்களுக்கு நுளம்பு வலை வழங்கல் நிகழ்வு
(ஏ.எல்.ஜனூவர்)
தேசிய டெங்கு வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்திலுள்ள நிறுவனங்களின் பங்களிப்பை பெறும் பொருட்டு கிழக்கிலங்கை அரபுக்கல்லூரியின் அதிபர் ஏ.எல்.எம். ஹாசிம் தலைமையில் மாணவர்களுக்கு நுளம்பு வலை வழங்கும் வைபவம் கல்லூரில் வழாகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன் போது அரபுக்கல்லூரின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கின்ற 125 மாணவர்களுக்கு நுளம்பு வலை வழங்கி வைக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் நுளம்பினால் பரவக்கூடிய மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வுக்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பெரோசா நக்பர், பொது சுகாதார பரிசோதகர் எம்.சி. ரஊப், அரபுக்கல்லூரியின் செயலாளர் சஹீட் ஹாஜியார், எகிப்த் கெயிரோ பல்கழைக்கழகத்தின் விரிவுரையாளர் அஹமட் அபுல்பஹா மற்றும் கல்லூரியின் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment