Header Ads



ஜனாதிபதி பங்களாதேஸிற்கு செல்லாமையால்தான், இலங்கை அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது

'உலகக்கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றியடைந்தமைக்கு எனது  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறுதி  போட்டியை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்களாதேஸிற்கு செல்லாமல் இருந்ததால்தான் இலங்கை அணியால் உலகக்கிண்ணத்தை கைப்பற்ற முடிந்தது.  அதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு நான் நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன்' என ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

'இலங்கை அணியின் வீரர்கள் சங்கக்காரவும் மஹேல ஜயவர்தனவும் பாராட்டுக்குரியவர்கள் மட்டுமன்றி எமது நாட்டின் வெற்றிச் சின்னங்கள்' எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில், புதன்கிழமை(9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'இந்த நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், களவு, திருட்டு சம்பவங்களுக்கு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஊழல் மோசடிகள் தொடர்பில் மில்லியன் கணக்கான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றாலும் அதற்கு தீர்வுகள் இன்னும் பெற்றுகொடுக்கப்படவில்லை. ஆனால், நீதியுடன் நடந்தால்மட்டும் கைதுசெய்கின்றார்கள்.

வீடு உடைப்பு, மனித கொலை, திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. ஆனால் காரணமானவர்கள் தப்பிக் கொள்கின்றனர். நாட்டில் நல்லிணக்கம் காணாமல் போய்கொண்டிருக்கிறது. நாட்டை மீட்டுத்தர முடியாதநிலை தோன்றியுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. உண்மைதான் நீங்கள் சொன்னது. அவர் சென்றிருந்தால் அங்கேயும் இலஞ்சம் கொடுத்து தோல்வியை வாங்கியிருப்பார்,இந்தியாவிடமிருந்து கடைசி முறை தோற்றதற்கும் இதுவே காரணம்.

    ReplyDelete
  2. இப்போ இது 'ரொம்ப முக்கியம்' ???

    ReplyDelete

Powered by Blogger.