அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்த மாணவர்கள் விபரம்
இலங்கையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை கம்பஹா ரத்னாவலி மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் மாணவிகள் இருவர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கம்பஹா ரத்னாவலி மகளீர் வித்தியாலயத்தின் மெனுஷிகா ஜயந்தி காரியவசம் மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் தபோதா ஹரிந்திரி கங்கொடவில ஆகிய மாணவிகளே சிறப்புச் சித்திகளை பெற்றுள்ளனர்.
இதேவேளை, இரண்டாவது இடத்தை மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் உச்சித தேஷான் என்ற மாணவனும், மூன்றாவது இடத்தை கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ரவீன் லசிந்து தென்னகோன் என்ற மாணவனும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நான்காவது இடத்தை காலி சவுத்லன்ட் வித்தியாலயத்தின் டி.எஸ்.ரொஷானா தரிந்தி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியின் கலிந்து செத்திக விக்கிரமசிங்க என்ற மாணவனும், விசாகா வித்தியாலயத்தின் என்.எச்.திலினி இந்துனில் என்ற மாணவியும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
5 வது இடத்தை கண்டி மகாமாயா கல்லூரி மாணவியும், குருணாகலை மலிதேவ மகளீர் வித்தியாலய மாணவியும் பெற்றுக்கொண்டனர்.
இதனிடையே, கடந்த வருடம் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்திகளை பெற்ற முதல் 5 மாணவ மாணவிகள் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் மாணவர்களின் பெற்றோரும், பாடசாலை அதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, ஜனாதிபதியினால் குறித்த மாணவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment