Header Ads



முஸ்லிம் தலைவர்கள் தமது சமூகத்திற்காக பேசாவிட்டால்..!

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கையில் பொதுபலசேனாவினால் மேற்கொள்ளப்படும் அராஜகங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களின் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான டிலான் பெரோரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் காலத்தின் தராசில் மிகவும் வளுவுள்ளதாக காணப்படுகின்றது. முஸ்லிம்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் குரல் கொடுத்தால் அல்லது அறிக்கைவிட்டால் அவர்களை இனவாதிகளாக காண்பித்து அதிலிருந்து தேவையற்ற விடயங்களை தொட்டுக் கொண்டும்,தொங்கிப் பிடித்துக் கொண்டும் பேசும் நபர்கள் ஏராளம்.

இந்த நிலையில் இலங்கையில் அண்மையக் காலமாக பொதுபலசேனா அமைப்பினரின் அத்துமீறிய அட்டகாசங்களும்,அறுவெறுப்பான பேச்சுக்களும் முஸ்லிம்களை மட்டுமல்லாது பௌத்தர்களையும் தலை குணியச் செய்துள்ளது.

முஸ்லிம் தலைவர்கள் தமது சமூகத்திற்காக பேசாவிட்டால் அவர்கள் தொடர்பில் விமர்சனஙகள் அப்பப்பா …..எத்தனை வகையில் வாங்கிக்கட்டுகின்றார்கள் என்பதை இன்றை இணையத்தளங்களில் குறிப்பாக பேஸ் புக்களில் வலம் வரும் வார்த்தைகளும் நாக்கூசுபனவாகவே இருக்கின்றது.தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு மத்தியில் சமூகம் சார்ந்த சிந்தணை வர வேண்டும் என்பது தான் இன்றைய தலைப்பாகும்.
இவ்வாறான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் தடுமாறும் தலைமைகளுக்கு உதவும் வகையில் இனவாதிகளின் முகத்திரையினை கிழித்தெறியும் வகையிலும்,பெரும்பான்மை சமூகத்தினரின் கோபப் பார்வையில் இருந்து முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தற்போது எமக்கு கிடைத்துள்ள இரு ஆயுதங்களாக அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரை அடையாளப்படுத்த முடியும்.

அமைச்சர் வாசு அவர்களை பொருத்த மட்டில் ஜனநாயகத்திற்கும் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பில் நேர்மையாக செயற்படக் கூடியவர் அதே போல் அமைச்சர் டிலான் பெரேரா அவர்களும் முஸ்லிம்கள் தொடர்பில் தெளிவை கொண்டவர்.இவர்கள் இலங்கையில் தற்போது பொதுபலசேனா என்ற பேரினவாத அமைப்பினர் மேற்கொண்டுவரும் அநியாயங்களுக்கு எதிராக திறந்த மனதுடன் கருத்துக்கலாள் மோதத் தணிந்துவிட்டனர்.

பொதுபலசேனாவின் ஞஞானசாரர் இலங்யைில் பௌத்த சாசனத்திற்கு அவப்பெயரை எற்படுத்துவதாகவும்,அதே போல் இலங்கையில் மற்றுமொரு இன ரீதியான யுத்தத்தை மேற்கொள்ள அடித்தளம் இடுவதாகவும் இவர்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி கூறிவருகின்றனர்.இது பல் தரப்பினரிடத்திலம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,இதன் பின்னணி தொடர்பிலும் ஆராய துாண்டியுள்ளது.ஒரு சமூகம் வாழும் பிரதேசத்துக்குள் பலவந்தமாக சென்று அம்மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து அவர்களை அவமதித்து விட்டு வரும் செயற்பாடு என்பது ஜனநாயகத்தை பின்பற்றும் நாடொன்றின் குணாதிசயமாக இருக்க முடியாது.இதனை அங்கீகரிக்கும் போது இது தொடராக நடை பெறுவதற்கான அடித்தளத்தினை இட்டுவிடும் என்பதும் திண்ணமாகும்.

ஞானசார தேரர் என்பவர் மதகுருவா என்று சிங்களவர்கள் கேட்கும் அளவுக்கு மாறியுள்ளதுடன்.அவருடன் பாதுகாப்பிற்காக வெள்ளை  டி சேர்ட் அணிந்து வரும் பெண்கள் யார் என்ற கேள்வியும் எழ  ஆரம்பித்துள்ளது.ஒவ்வொரு குழப்ப நிலையிலும் ஞானசார தேரர் சொல்லும் வார்த்தை (மம ஒன எஹக்கட்ட ஒட்டுவேன் தமா எவித் இன்ன என்று )எனவே இது தொடர்பிலும் கவனம் இருக்க வேண்டும்.

குறிப்பாக எந்த சந்தர்ப்பத்திலும் ஞானசோர தேரர் பாவிக்கும் சொற்களில் ஒன்று தான் இது சிங்களவர்களின் நாடு என்று.சிங்களவர்களின் நாடு என்றால் இங்கு வாழும் தமிழ்,முஸ்லிம் மக்கள் கடல் கடந்து வந்தவர்கள் என்ற பதத்தை குறிக்கின்றது.முஸ்லிம்களின பூர்வீகத்திலும்,தமிழர்களின் வாழ்விடத்திலும் சென்று சிங்களவனின் பூமி இது,நீங்கள் இங்கு வாழ தகுதியற்றவர் என்று கூறுகின்றார் என்றால் இவர் தொடர்பில் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ள கருத்து பொருந்துபனவாகவே உள்ளது.

ஒரு நாட்டின் சட்டமும்,ஒழுங்கும் பின்பற்றப்பட வேண்டுமெனில் அரசாங்கம் சில களை எடுப்புக்களை செய்ய வேண்டும்.அது சட்ட ரீதியாக இருக்கின்ற பொது தான் ஏனையவர்கள் அதனை செய்வதில் இருந்து விளகியிருப்பார்கள்.மாறாக அதனை அரசாங்கம் செய்யாது வேடிக்கை பார்க்கும் என்றாள் சர்வதேசத்தில் இலங்கை தொடர்பில் பேசப்படும் விடயங்கள் உண்மைப்படத்தப்பட்டுவிடும்.

இன்று சர்வதேச நாடுகள் இலங்கையின் மதச் சதந்திரம் தொடர்பில் கவலை கொண்டுள்ளது.அண்மையக் கால சம்பவங்கள் இதற்கு வழி அமைத்துவிட்டது.வளைகுடா நாடுகள் இலங்கைக்கு பல துறைகளுக்கான முதலீடுகளை செய்தவருகின்றது.அதே போல் உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பிலும் சில அமைப்புக்கள் மற்றும் பரோபகாரிகள், நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவிகளை செய்கின்றனர்.இதனை தடுப்பதற்கு பொதுபலசேனாவின் ஞானசார தேரர் யார் ? ஏன் அரசாங்கம் இவரை கடடுப்படுத்த முடியாது,மத குருவின் ஈனச் செயல்களை ஏன் பௌத்த கலாச்சார அமைச்சு தட்டிக் கேட்க முடியாதுள்ளது என்பது இயல்பாக எழும் கேள்விகளாகும். இந்த நிலையில் இலங்கை அரசு குறுகிய காலத்துக்குள் இதனை கடடுப்படுத்த தவறுமெனில் சர்வதேசத்தில் நெருக்குவாரங்களை சந்தி்க்க நேரிடும் என்பது எதிர்வாகும்.வெள்ளம் வரு முன் அனைக்கட்ட வேண்டும்,தவறின் துன்பங்களை அனுபவிப்பது ஒட்டுமொத்த இலங்கை தேசத்து மக்களே !!

No comments

Powered by Blogger.