மஹேல + சங்கக்காரவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆகியோரை விமர்சிக்கும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானம் 21-04-2014 நடைபெற்ற நிறுவனத்தின் நிறைவேற்று குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் நுஸ்கி மொஹமட் நியூஸ்பெஸ்ட்டுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் செயற்படுவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதற்குமுன்னர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment