Header Ads



பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயிலுக்கும், ஏ.ஆர்.மன்சூருக்கும் தென்கிழக்குச் சமூகத்தின் நன்றிப் பூக்கள்

இலங்கையின் கல்வி வரலாற்றிலும், குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லிம்களின் உயர்கல்விப் புரட்சியிலும் அழியாத முத்திரை பதித்து விளங்கும் தென்கிழக்குப் பல்கலைக் கழகம், எதிர்வரும் 20ம் திகதி ஞாயிற்றுக் கிழமை தன் மேனி எழிலுக்கு மேலும் மெருகூட்டிக் கொள்கின்றது. ஆம், அன்றுதான் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கடந்த 5 வருடங்களாகக் கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்தின் பொது நூல் நிலையத்தையும், முகாமைத்துவ, வர்த்தக பீடத்துக்கான கட்டிடத் தொகுதியையும் இந்நாட்டின் அதிஉத்தம ஜனாதிபதி, மான்புமிகு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு நடக்கவுள்ளது. சுமார் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடங்கள் மிக அழகிய வடிவமைப்பில், பல நவீன வசதிகளுடன் திகழ்வது இப்பல்கலைக் கழகத்தின் எழிலை மேலும் பறைசாற்றுகின்றது.

உண்மையில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் காலத்திலேயே, முன்னாள் ஜனாதிபதி மான்புமிகு சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், தற்போதைய ஜனாதிபதி அதிஉத்தம மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே பாரிய வளர்ச்சியையும், பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிஉத்தம ஜனாதிபதி அவர்களோடு, தோளோடு தோள் நின்று இப்பல்கலைக்கழக வளர்ச்சிக்காக அயராதுழைக்கும் உயர்கல்வி அமைச்சர் கௌரவ எஸ்.பி.திசாநாயக்கா, அவர்களது செயலாளர், மற்றும் உயரதிகாரிகளும் இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். எனவே 20ம் திகதி இத்திறப்பு விழாவுக்காக தென்கிழக்குப் பல்கலைக் கழகம் வரும் அதிஉத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, உயர்கல்வி அமைச்சர் கௌரவ எஸ்.பி.திசாநாயக்கா, மற்றும் அமைச்சர்கள், உயரதிகாரிகளை தென்கிழக்கு சமூகம் மனமுவந்து, நன்றிப் பெருக்கோடு வரவேற்கின்றது.

அதேநேரத்தில் மற்றொரு முக்கிய விடயத்தையும் இவ்விடத்தில் கூற விரும்புகின்றோம். இப்பல்கலைக் கழகம் ஒலுவில் பிரதேசத்தில் சுமார் 225 ஏக்கர் நிலப்பரப்பில் அவசரமாக கட்டிமுடிக்கப்பட்ட சிறு சிறு கட்டிடங்களிலும் நெற்சந்தைப்படுத்தல் சபையின் பழமையான கட்டிடங்களிலும் 1995ல் ஆரம்பிக்கப்பட்டு, 2005ம் ஆண்டுவரை எவ்வித உட்கட்டமைப்பு வசதிகளும் விரிவு படுத்தப்படாமல், புதிய நவீன கட்டிடங்கள் கட்டியெழுப்ப எவ்வித அரச, தனியார் நிதி உதவிகளுமின்றி மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே தனது பத்தாண்டு காலத்தைக் கழித்தது. மாணவர்கள் மட்டுமன்றி உபவேந்தர், பதிவாளர், விரிவுரையாளர்கள், ஏனைய ஊழியர்களும் போதிய இடவசதியோ, சுத்தமான கழிவறைகளோ, தமது கடமைகளை செவ்வனே செய்வதற்கு உரிய தொழில்நுட்பத்துடனான வசதிகளோ இன்றி மிகவும் சிரமப்பட்டார்கள். இப்பல்கலைக் கழகத்தின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் கௌரவ எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்களின் ஆலோசனையின் பேரில் பலகோடி ரூபா செலவில் கட்டிமுடிக்கப்பட்ட பல்கலைக்கழக தலைவாசல் (நுவெசயnஉந புயவந) மட்டும் மிக அழகாக, நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டிருந்தது. ஏனைய அமைத்து கட்டிடங்களும் பழைய வீடுகளில் புணரமைக்கப்பட்ட காரியாலயங்களாக காட்சியளித்தன. அதன்பிறகு அரசாங்கத்தின் நிதி மூலம் நிர்வாகக் கட்டிடம் மிக அழகிய முறையில் கட்டிமுடிக்கப்பட்டு உபவேந்தர், பதிவாளர், நிதியாளர் உட்பட அனைத்து உயரதிகாரிகளும் ஓரளவு நவீன கட்டிட அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு, மன நிம்மதியோடு தமது காரியங்களை நிறைவேற்றி வந்தனர். 

ஆனால், ஒலுவிலில் இயங்கிவந்த முகாமைத்துவ வர்த்தகபீடம், கலை கலாசார பீடம், இஸ்லாமிய கற்கை அறபு மொழிப்பீடம் என்பன எதுவித புதிய வசதியான கட்டிடங்களுமின்றி, சிரமத்தின் மத்தியிலேயே இயங்கத் தொடங்கியது. இவ்வேளை 2003ல்  உபவேந்தராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஏ.ஜி.ஹுஸைன் இஸ்மாயில் அவர்களின் அயராத முயற்சியினால் அரசாங்க நிதி மூலம் கலை, கலாசார பீடத்துக்கான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2009ம் ஆண்டில் அது திறந்து வைக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்திலே மிக அதிக மாணவர்களைக் கொண்ட கலை கலாசார பீடம் கட்டிட வசதியில் இதன்மூலம் தன்னிறைவைப் பெற்றது. இக்கட்டிடம் பல தசாப்தங்களுக்குப் போதுமான இடவசதியையும், கம்பீரமான தோற்றத்தையும் கொண்டு இன்றுவரை மிளிர்கின்றது. ஏனைய பீடங்களுக்கோ, திணைக்களங்களுக்கோ புதிய கட்டிடங்களை பெறக்கூடிய எவ்வித வசதிகளுமின்றி உபவேந்தர் அவர்களும், பல்கலைக்கழக நிருவாகமும் திணறிக்கொண்டிருந்த வேளையில் தான், முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சரான, கல்முனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் குவைத் நாட்டில் இலங்கைத் தூதுவராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். தான் பிறந்த மண்ணுக்கும், மக்களுக்கும், கல்விச் சமூகத்துக்கும் தன்னால் தனது குவைத் நாட்டுத் தூதுவர் பதவி மூலம் ஏதாவது செய்ய வேண்டுமென்ற தணியாத தாகத்தோடு இருந்த போதுதான் தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தராக அப்போது கடமையாற்றிய ஏ.ஜி.ஹுஸைன் இஸ்மாயில் அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பீடங்களுக்கான கட்டிடத் தேவைகளையும், அதற்கான நிதித் தேவைகளையும் தூதுவர், முன்னாள் அமைச்சர் மன்சூரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இருவரும் உடனடியாக செயலில் இறங்கினார்கள். அமைச்சர் கேட்டவுடன் பல்கலைக் கழகத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள்(ஆயுளுவுநுசு PடுயுN) மற்றும் சாத்தியப்பாடான அறிக்கை(குநுயுளுஐடீடுநு சுநுPழுசுவு) மற்றும் ஆவணங்களை உடனுக்குடன் கையளித்தார். உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால, அதன் பின் வந்த கௌரவ எஸ்.பி.திசாநாயக்கா உட்பட அனைவரும் தமது ஆதரவையும், ஒத்துழைப்பையும் பூரணமாக இத்திட்டத்திற்கு நல்கினர். அவர்களின் எதிர்பார்ப்பு கருக்கட்டியது. குவைத் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தோடு செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு முதற்கட்டமாக சுமார் 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 2005 முதல் 2010 வரை பின்வரும் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

01) இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீடத்துக்கான கட்டிடத்தொகுதி.
02) தற்போதைய பொறியியல் பீட கட்டிடத் தொகுதி.
03) உயர் உத்தியோகத்தர்களுக்கான 23 வீடுகளைக் கொண்ட கட்டிடத்தொகுதி.
04) விளையாட்டரங்கு.
05) ஆண், பெண் மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடத்தொகுதி.
06) மாணவர் நலம்புரி மண்டபம்.
07) கணணி, ஆங்கில பாடங்களுக்கான கட்டிடத்தொகுதி.
இவற்றின் மூலம் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் தனது கட்டிடத் தேவைகளில் எண்பது வீதமானவற்றை பூர்த்தி செய்து, இலங்கையின் ஏனைய பல்கலைக் கழகங்கழோடு தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றது. வருடாந்தம் 200, 300 ஆக இருந்த மாணவர் அனுமதி இப்போது ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. எல்லா மாணவர்களுக்கும் விடுதி வசதிகள் வழங்கக்கூடிய வாய்ப்பை பல்கலைக்கழகம் பெற்றது. வெளிநாட்டு மாணவர்களும் அனுமதி பெற முடிகின்றது.

இவ்வாறான உட்கட்டமைப்பு வசதிகளின் முன்னேற்றத்தினால் பெரும்பாலான பீடங்கள் பட்டப்பின்படிப்பு கல்வி நெறியை ஆரம்பித்துள்ளன. ஒவ்வொரு வருடமும் சர்வதேச ஆய்வுக் கருத்தரங்குகளை நடாத்தும் சந்தர்ப்பம் எல்லா பீடங்களுக்கும் கிடைத்துள்ளன. இக்கருத்தரங்குகளுக்கு பல்வேறு வெளிநாட்டவர் அடிக்கடி தென்கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கு வந்த வண்ணமுள்ளனர். இதுவரை கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடந்து வந்த பல்கலைக்கழக வருடாந்த பட்டமளிப்பு விழா பட்டமளிப்பு வளாகத்திலேயே நடாத்தும் வாய்ப்புக் கிட்டியது. பல்வேறு பயிற்சி நெறிகள், கருத்தரங்குகள், விசேட உரைகள் என்பன அடிக்கடி நடக்கும் யதார்தமான பல்கலைக்கழக வாழ்வியலை தென்கிழக்குப் பல்கலைக் கழகம் கண்டது. அதியுத்தம ஜனாதிபதி அவர்களே இரண்டு தடவை விஜயம் செய்யும் தகுதியை தென்கிழக்குப் பல்கலைக் கழகம் பெற்றது. இக்கட்டிடங்கள் அனைத்தும் 2010ம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் காலத்திலேயே பெரும்பாலான கட்டிடங்கள் நிறைவுபெற்று திறந்து வைக்கப்பட்டன.

குவைத் நாட்டுடனான இரண்டாம் கட்ட ஒப்பந்த அடிப்படையிலும், மஹிந்த சிந்தனையின் பல்கலைக்கழக புணரமைப்பு வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவும், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கான அஷ;ரப் ஞாபகார்த்த பொது நூல் நிலையம், முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கான கட்டிடத் தொகுதிகள் என்பன சுமார் 360 மில்லியன் ரூபா செலவில் இந்நாட்டின் அதிஉத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் எதிர்வரும் 20ம் திகதி கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளன. அவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கும் பெறுபேற்றை தற்போதைய உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பெற்றுள்ளார்.

இப்பல்கலைக்கழகம் உருவாவதற்கு முன்நின்று உழைத்த 
 நாம்; பல்கலைக்கழக சமூகத்தின் சார்பில், இப்பல்கலைக்கழகம் பிரமாண்ட உட்கட்டமைப்பு வசதிகள், வளர்ச்சிகள், முன்னேற்றம் காண்பதற்கு கருவாக, நிறைவாக உதவிய வல்லவன் அல்லாஹ்வுக்கும், பல்வேறு இடர்பாடுகள், ஏச்சுக்கள், பேச்சுக்கள், தூற்றல்களுக்கு மத்தியிலும் இவை அனைத்தையும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் காலடிக்கு கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் - குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.ஆர்.மன்சூர், முன்னாள் உபவேந்தரும், தற்போதைய மலேசிய பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றுபவருமான பேராசிரியர் ஏ.ஜி.ஹுஸைன் இஸ்மாயில் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிப் பூக்களை உதிர்க்கின்றோம்.
''மனிதனுக்கு நன்றி உரைக்காதவன் 
இறைவனுக்கு நன்றி உரைக்காதவனாவான்''     (அல்குர்ஆன்)
'எந்தன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகர்க்கு'    (திருக்குறள்)
தென்கிழக்குசமூகமீ
     

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Allah will give good rewards to Former Minister Mr. A.R.M. Mansoor and Former Vice Chancellor Dr. A.G. Hussain Ismail and their families. Jasakallahu Khairah.

    ReplyDelete
  3. இதற்காக தோளோடு தோள் நின்று உழைத்த நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் நல்ல வாழ்க்கையை கொடுப்பானாக. ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.