யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களில் சுகாதார சீர்கேடுகள்..!
யாழ் மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லீம்களின் காணிகளின் அருகே கவனிப்பாரற்று காணப்படும் ஏனைய காணிகளினால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக கிராம சேவகர் பிரிவுகளா உள்ள ஜே-86,ஜே-87 ஆகிய பகுதிகளில் உள்ள ஆசாத் வீதி,எம்.ஓ வீதி,காமல் வீதி,ஜின்னா வீதி ஆகியவற்றில் முஸ்லீம் மக்கள் வழமை போன்று மீளக்குடியமர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
எனினும் ஏனைய முஸ்லீம் மக்கள் 1990 ஆண்டு விட்டுச்சென்ற தங்கள் காணிகளை இன்றும் சுத்தம் செய்து இன்று வரை மீளக்குடியமரவில்லை.
இதனால் அப்பகுதி காடுகள் போல காட்சியளிக்கின்றதுடன் விச ஜந்துக்கள் உள்ள பகுதியாகவும் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சில மீளக்குடியமர்ந்த மக்கள் காணிகளில் மீளவும் வீடுகளை கட்டி ஏனைய சகோதரர்களுக்கு விலைக்கு விற்கும் முயற்சியில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.
இவ்விடயம் அரசாங்க அதிபர்.யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் இவ்வாறு கவனிப்பாரற்று காணப்பட்டுள்ள காணிகள் உரிமையாளர்களால் கைவிடப்பட்டதாக கருத்தில் கொண்டு அரசாங்க உடமையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள முயல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
(பா.சிகான்)
Post a Comment