கல்வி அமைச்சரே...! கல்வி அமைச்சின் செயாலாளரே...!!
மாற்றப்படாமல் ஒலிம்பிக் விளையாட்டின் தகவல் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
இலங்கையின் அரச பாடசாலையில் தரம் 4 மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தமிழ் பாடப்புத்தகத்தில் பாடம் 16 பக்கம் 72 தொடக்கம் 76 வரை ஒலிம்பிக் விளையாட்டு எனும் தலைப்பு காணப்படுகிறது.
இதில் ஒரு விசித்திரம் என்னமென்றால் 52 வருடங்களின் பின்னர் இலங்கைக்காக 200ஆ ஓட்டப்போட்டியில் சுசந்திக்கா ஜெயசிங்க வெண்கலப்பதக்கம் பெற்றுக்கொடுத்தார்; என்ற தகவல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுவும் உண்மை என்பது உலகறிந்த விடயம்.
ஆனால் மேற்படி 200ஆ ஓட்டப்போட்டியில் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மேரியன் ஜோன்ஸ் என்பவர் ஊக்க மருந்து பாவித்தமை சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் ஊர்ஜிதம் செய்யப்பட்;டு அவருடைய பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டு முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளிப்பதக்கங்கள் பெற்றதாக சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் அறிவிக்கப்பட்டது.
ஆகவே சுசந்திக்கா ஜெயசிங்க வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார் என்பதுதான் உலகறிந்த விடயம்.
இத்தகவலும் உலகம் அறிந்திருக்கும் இவ்வேளையில் இலங்கையில் மட்டும் தரம் 4 தமிழ் பாடம் கற்கின்ற பாடசாலை மாணவர்கள் அறியாமல் இருப்பதற்கு யார் காரணம்.? இதுவரையில் மேற்படி தகவல் மாற்றப்படாமல் இருப்பதனை யார் மாற்றுவது
கல்வி அமைச்சரே.....! கல்வி அமைச்சின் செயாலாரே...!
8ம் வகுப்புக்கான அச்சிடப்பட்ட புத்தங்கங்கள் நிலுவையில் இல்லாதபோது, தரம் 3 + தரம் 5 பாடப்புத்தகங்களை சேர்த்து வழங்குங்கள் அப்போ தரம் 8 வந்துவிடும் என்று சொன்னார்களாம் நம் கல்வி அமைச்சர்கள்.
ReplyDeleteகல்விக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இருந்தால்தானே தாற்பெறியங்கள் விளங்கும்???