ஆசிரிய ஆலோசகர்களினது சேவை வரைபு தயாரிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை
(அனாசமி)
நாட்டிலுள்ள வலயக் கல்வி அலுவலகங்களில் சேவையாற்றி வருகின்ற ஆசிரிய ஆலோசகர்களுக்கான சேவை வரைபு ஒன்றினைத் தயாரிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதமொன்றை சகல மாகாண பிரதம செயலாளர்கள், மாகாணக் கல்விச் செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் ஒப்பமிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரகாரம் பின்வரும் விடயங்கள் தொடர்பான சிபார்சினை கோரியுள்ளது.
இது தொடர்பான சேவைக்குறிப்பினுள் உள்ளடக்குவதற்கு பொருத்தம் எனக் காண்கின்ற சிபார்சுகளை சகல மாகாணங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள கல்வியமைச்சின் செயலாளர் எதிர்பார்க்கின்றார். இவ்வாறு உத்தேசிக்கப்பட்டுள்ள ஆசிரிய ஆலோசகர் சேவைக்கான ஆளணி எண்ணிக்கையினை உருவாக்கல் தொடர்பாக மாகாண முதலமைச்சர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கும் மேலதிகமாக ஆசிரிய ஆலோசகர் பிரமாணக் குறிப்பில் உள்ளடக்கப்பட வேண்டியுள்ள விடயம் தொடர்பாக தங்களது அவதானிப்புக்களைக் கொண்ட அறிக்கை ஒன்றினை அனுப்பிவைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
கல்வி வலயங்களில் இவ்வாறு சேவையாற்றுகின்ற ஆசிரிய ஆலோசகர்கள் தற்போது ஆசிரிய சேவையில் இருகின்றனர். நீண்டகாலமாக பல்வேறு சுமைகளுக்கும் மத்தியில் சேவையாற்றுகின்ற ஆசிரிய ஆலோசகர்களின் சேவையை கருத்திற் கொண்டு இதற்கான சேவைத் திட்டம் ஒன்றை புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென கடந்த காலங்களில் இது தொடர்பான சங்கங்கள் அறிக்கை விட்டுக் கொண்டு வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்வியமைச்சுக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் ஆசிரிய ஆலோசகர்கள் மேற்கொண்டிருந்தனர். இன்று இச்சேவையினரின் உன்னதமான அர்;ப்பணிப்புக் காரணமாக பாடசாலைகளின் பாடரீதியாகவும், மாணவர்களினதும் அடைவுகள் அதிகரித்துள்ளதாகவும், ஆசிரியர்களின் வாண்மைத்துவம் மேம்பட்டுள்ள நிலையில் பொருத்தமான வகையில் இவ்வரைபினை வரைந்து புதிய சேவை ஒன்றினை ஏற்படுத்த முயன்றுள்ளதை வரவேற்பதாக கிழக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Post a Comment