யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மாணவி ஜாபீர் நூறூல் சிபா சாதனை
(பா.சிகான்)
2013 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சா-த) பரீட்சையின் இன்று வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவி ஜாபீர் நூறூல் சிபா 6ஏ,2பி,1எஸ் பெறுபேற்றினை பெற்றுள்ளார்.
மேற்படி கல்லூரியில் கடந்த இப்பரீட்சைக்கு 22 மாணவர்கள் தோற்றியதுடன் 06 மாணவர்கள் உயர்தரக்கல்வியை தொடர தகைமை பெற்றுள்ளதாக அக்கல்லூரியின் பிரதி அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கல்லூரியின் மற்றுமொரு மாணவியான நிஜாமுதீன் பாத்திமா ருசைக்கா 3ஏ,2பி,4 சி பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
இது தவிர கடந்த 2012 ஆண்டு சாதாரண பரீட்சைக்கு 15 பேர் தோற்றியதுடன் 4 மாணவர்கள் மாத்திரம் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சைப்பெறுபேறுகள் வெளியாகிய பின்னர் கல்லூரி அதிபரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோதிலும் அவர் பதிலளிப்பதில் இருந்து தவிர்ந்து வந்தார்.
Post a Comment