Header Ads



பிரிட்டன் ஹீத்ருவை, பின்னுக்கு தள்ளிய துபாய் விமான நிலையம்


ஐரோப்பிய கண்டத்தின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற சிறப்பிடத்தை பெற்றுள்ள பிரிட்டைன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தை பின்னுக்கு தள்ளி, முதல் இடத்தை பிடிக்க துபாய் விமான நிலையம் முன்னேறி வருவதாக மேலை நாட்டு ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

பிளாஸ்டிக்கினாலான பளபளக்கும் செயற்கை பனை மரங்கள், மணி கணக்கிலான விமானப் பயணத்தினால் சோர்ந்து வந்து தரையிறங்கும் பயணிகளின் முகங்களில் பூமழை தூவும் செயற்கை பனித்துளி என காண்போரின் கண்ணையும், கருத்தையும் கவர்ந்து வரும் துபாய் விமான நிலையம் கலையழகில் மட்டுமல்ல... கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கையிலும், ஹீத்ருவை மிஞ்சி விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2 மாத காலத்தில் மட்டும் 20 லட்சம் சர்வதேச பயணிகளை கையாண்டுள்ள துபாய் விமான நிலையத்தில், ஐக்கிய அரபு எமிரேட் விமான நிறுவனத்தை சேர்ந்த விமானங்கள் மட்டும் தரையிறங்கி, புறப்பட்டு செல்லும் வகையில் 17 லட்சத்து 13 ஆயிரம் சதுரடியில் மூன்றாவது முனையம் புதிதாக கட்டப்பட்டு வருகின்றது.

இந்த மூன்றாவது முனையத்தை மேற்கோள் காட்டும் அந்த ஊடகங்கள், விரைவில் இது திறக்கப்பட்டால், ஆண்டொன்றுக்கு 6 கோடி முதல் 9 கோடிக்கு இடையிலான சர்வதேச பயணிகளை கையாளக்கூடிய திறன் கொண்டதாக துபாய் விமான நிலையம் இன்னும் 4 ஆண்டுகளில் மாறிவிடும் என்று கருத்து தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.