Header Ads



தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை விட, வடக்கு முஸ்லிம்கள் சந்தித்தவைகள் ஏராளம்..!


-    இர்ஷாத் றஹ்மத்துல்லா -

தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை விட கடந்த 20 வருடங்களாக வடக்கு முஸ்லிம்கள் சந்தித்தவைகள் ஏராளம். அவர்களுடன் ஒப்பீட்டு அளவி்ல் முஸ்லிம்களைப்பற்றி பார்ப்பது ஒரு விதத்தில் தேவையற்றதாக இருந்த போதும்,இன்றைய சூழலில் அது பொருத்தமான அளவீடாக இருக்கும் என்பதை கசப்பாயினும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.கலிமாவை முஸ்லிம்கள் மொழி்ந்ததனாலும்,இஸ்லாமிய பெயர்களை தன்னகக்தே சூட்டிக் கொண்டமையினாலும் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை இன்று முழு நாட்டில் வாழும் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இருந்த போதும் இந்த முஸ்லிம்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும்,அமைப்புக்களும்,தனிப்பட்ட நல்லுள்ளம் படைத்தவர்களும் எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக கடந்த பல ஆண்டுகளாக இம்மக்கள் வாழ்ந்த இடத்தில் சகல உதவிகள் கிடைக்கப் பெற்றன.அதே போல் தற்போது மீள்குடியேறியுள்ள பிரதேசங்களிலும் அம்மக்களுக்காக உதவிகள் கிடைக்கப் பெற்ற வண்ணம் உள்ளன.

இது இவ்வாறு இருக்க தாங்கள் வாழ்ந்த பிரதேசங்களிலும் அவற்றை அண்டிய பகுதிகளிலும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வாழ்வதற்கு தகுதியில்லை என்ற கருத்தினை தற்போது பொது பலசேனா அமைப்பு விதைத்து வருகின்றது.யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்கள் தாங்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தேவையான உதவிகளை அரசாங்கமும்,அரசார்பற்ற நிறுவனங்களும்,மத அமைப்புக்களும் இன்றும் செய்துவருகின்ற நிலையில் வடக்கு முஸ்லிம்களுக்கு உதவிகளை செய்ய சில அமைப்புக்கள் முன் வந்த போதும் அவற்றுக்கு எதிரான செயற்பாடுகள் தங்கு தடையின்றி இனவாத முகத்துடன் முன்னெடுக்கப்பட்டே வருகின்றதை காணமுடிகின்றது.
குறிப்பாக தற்போது பூதகரமாக பிரசாரம் செய்யப்படும் வடக்கில் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மறிச்சுக்கட்டடி மீள்குடியேற்ற திட்டம் தொடர்பில் பிழையான அனுகுமுறைகளை பொதுபல சேன மற்றும் அவர்களின் சந்தர்ப்பவாத செயலில் இலாபம் சம்பாதிக்க விரும்பும் இனவாத சிந்தணைகளை கொண்ட மத அமைப்புக்கள் பேச ஆரம்பித்துள்ளன.

அரசாங்கம் என்ற வகையில் இலங்கை அரசுக்கு தலையாய பொறுப்பிருக்கின்றது.வடக்கிலிருந்து இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து முறையான மீ்ள்குடியேற்றம் ஒன்றை செய்வதற்கு,துரதிஷ்டம்,அரசாங்கமும் இரண்டை நாக்கினை கொண்டு செயற்படுவதினால் இந்த மீள்குடியேற்றம் பிரச்சினை பெற்றதொன்றாகவே இருக்கின்றது.தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்து,நாடடில் இனவாத சக்திகளை அழித்து இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் அரசாங்கம் பொது பலசேனா விடயத்தில் உறுதியான முடிவினையெடுக்காமல் இருப்பது தொடர்பிலும் பல்வேறு மட்டத்தில் விவதாங்களுக்குரிய ஒரு பொருளாக மாறிவருகி்ன்றமையினை பார்க்க முடிகின்றது.

அரசாங்க காணியினை அது வனபரிபாலன சபைக்கு சொந்தமான காணிகளை தனிப்பட்ட நபராலோ,அல்லது வேறு குழுக்களாலோ அபகரிக்க முடியுமா ? என்ற கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது.தனியார் மயமாக்கல் என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதே போல் அரசுக்கு சொந்தமான எத்தனை ஆயிரம் ஏக்கர்கள் உல்லாசப்புரியாக்குவதற்கு வழங்கப்படுகின்றன.இவைகள் தேவையானதொன்று இதனையும் நாம் ஒரு முறை மீள்பார்வைக்குட்படுத்த வேண்டும்.குறிப்பாக முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களில் வேறு இனத்தவர்களை பலவந்தமாக கொண்டு வந்து குடியேற்றி கலாச்சார ரீதியான சீரழிவுகளை தோற்றுவிக்கும் மற்றுமொரு செயற்பாடும் இடம் பெறுகின்றதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
வில்பத்து சரணாலயத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும்,அங்கிருந்து அம்மக்களை வெளியேற்ற வேண்டும் என்று கொக்கரிக்கும் ஞான சார தேரர் இந்த முஸ்லிம்கள் இழந்தவை தொடர்பில் எதையும் பேசாமல் இருப்பதும்,முஸ்லிம்கள் அழித்தொழிக்கும் மியன்மாரின் மற்றுமொரு கொன்த்தராத்து காரராக மாறியுள்ளார் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குயேற்றத்திற்கு சர்வதேச நாடுகளும்,அமைப்புக்களும் இலங்கைக்கு உதவி செய்வது என்பது இன்று நேற்று இடம் பெற்றுவரும் ஒரு செயலல்ல.இது பல ஆண்டுகளாக நடை பெறும் ஒன்று இதன் மூலம் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு பாரிய சுமை குறைகின்றது.

சட்ட ரீதியான முறையில் அரச காணிகள் விடுவிக்கப்பட்டு ஆவண ரீதியாக காணிப் பகிர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனை பிழையாக சித்தரித்து முஸ்லிம்களையும்,முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் தாக்கி காயப்படுத்த முனைவது என்பது அங்கீகரிக்கப்பட முடியாத ஒரு நடவடிக்கையாகும்.இந்த அநியாயத்தை செய்யும் அமைப்புக்கள் குறித்து எடுக்கப்பட வேண்டியவற்றை இலங்கை முஸ்லிம்கள் பதவி ,பட்டங்களை ஒரு புறம் வைத்துவிட்டு ஒன்றுபட வேண்டும் என்பது தான் காலத்தின் தேவையாகும்.

         ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்,

No comments

Powered by Blogger.