Header Ads



அரசின் ஆசிர்வாதத்துடனே பொதுபலசேனாவும், ஞானசார தேரரும் செயற்பாடுகின்றனர் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

(அஸ்ரப் ஏ. சமத்)

பொதுபலசேனாவும் அதன் ஞானசார தேரரும்  இந்த அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடனேயே அவரது செயற்பாடுகளைச் செய்து வருகின்றமையே எனக்கு புலானாகின்றது. அவர்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு நெறுப்பை வைப்பதற்கு முயற்சிக்கின்றனர். என அமைச்சர் வாசுதேவநாணயக்கார நேற்று இரவு பீ.பி.சி சிங்கள சேவையான சந்தேசிய வானொலிச் செய்தியில்  தெரிவித்தார்.

கொழும்பு நிப்போண் ஹோட்டலில் பொலிசார் பாத்திருக்க அவர் செய்கின்ற செயல்களையும், சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்டுகின்ற பொலிசார் வாய்மூடி கையை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்க தேரரின்  நடவடிக்கைகளை செய்து கொண்டு போகின்றார்.  ஆகவே தான் முதலில் பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அண்மைக்காலமாக இந்த ஞானசார தேரர் ஏனைய மதங்களையும் மத நிலையங்களை தாக்குவது அல்லது விமர்ச்சிப்பதற்கு எந்த அரசாங்கம் இவருக்கு அனுமதி அளித்தது. இந்த நாட்டில் அந்னியோண்னியமாக வாழ்ந்து வரும் சகோதரத்துவ இனங்கள் மீது இவர் நகரக்கு நகர் சென்று கூட்டங்களை நடாத்தி  இனங்களுக்கிடையே விரிசலையும் மோதலையும் ஏற்படுத்தி வருகின்றார்.

பௌத்த மதத்திற்கு இந்த நாட்டில் ஏதும் இடைஞ்சல்கள் அல்லது அச்சுருத்தல்கள் ஏற்பட்டால் அதனை கவணிப்பதற்கென்று பௌhத்த சாசன அமைச்சு ஒன்று இருக்கின்றது. அவ்வாறு பௌத்த மதத்திற்கு பங்கம் விளைவித்தால் இவர் அந்த அமைச்சிடம் சென்று முறையிடலாம்.  அதற்காக சட்டத்தையும் நீதியையும் தணிநபர்கள் எடுத்துக்கொண்டு இந்த நாட்டில்  செயல்பட முடியாது.

இவர் ஏற்கனவே ஒரு மத நிலையத்தை தாக்கியதாக நீதிமன்றத்தில்கூட வழக்கு ஒன்று இருந்தது. அதிலும் அவர் விடுபட்டுள்ளதாக அறிகின்றேன். என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சந்தேசிய ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

4 comments:

  1. கௌரவ வாசுதேவ அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்......!!!! இதுபோன்ற எமது மதிப்புக்குறிய தலைவர்கள் இந்த BBS இற்கு எதிராக அறிக்கை விடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக பௌசி, அஸ்வர், காதர், ஹிஸ்புல்லா, அதாவுல்லா....ரவுப் ஹக்கீம்.....!!

    ReplyDelete
  2. A non Muslim politician, Humanitarian makes a fair and justice remark against BBS while our so called Muslim politicians keep their mouth shut.Vasudeva and other decent politicians do realize how much evil actions this BBS is doing and how much adverse effect it will lead to.
    May God bless SL.

    ReplyDelete
  3. they are sleeping now.when the election come will wake up.

    ReplyDelete
  4. ஆமாம், வாசுதேவ எங்கே இருக்கிறார். எனக்குத் தெரிந்தமட்டில் அவர் ஒரு கெபினட் அமைச்சர். எல்லாரும் ரீல் விடுபவர்கள்தான்!

    ReplyDelete

Powered by Blogger.