Header Ads



ஓநாய், ஆட்டுக் குட்டிக் கதை..!


(நஜீப் பின் கபூர்)

ஜாதிக  பலசேனா அமைப்பு கொழும்பில் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டிற்குள் புகுந்து அட்டகாசம் பண்ணி அவர்களிடத்தில் இருந்து பறித்துச் சென்ற ஆவணங்களை இன்று கொம்பனித் தெரு (21.04.2014) பொலிஸாரிடத்தில் பொது பல சேனாவின் ஞானசாரர் தரப்பு கையளித்திருக்கின்றது. என்று நீதி மன்றத்தில் பொலிஸர் தெரிவத்திருக்கின்றார்கள். அதுவும்  தங்களுடன் வந்தவர்கள் இவற்றைத் தவறுதலாக எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படித் தவறுதலாக எடுத்துச் சென்றிருந்தால் அதிலுள்ள கடிதங்களை ஊடகங்கள் முன் காட்டி அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றி ஞானத்தார் தரப்பில் பேசப்பட்டதே அது எப்படி..? ஆட்டுக் குட்டி ஓ நாய் கதைதான் இங்கு அரங்கேரிக் கொண்டிருக்கின்றது என்பதனை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.   

ஆவணங்களைப் பறித்தெடுப்பதை ஊடகங்கள் தெளிவாக படம் பிடித்துக் காட்டியபோது அவற்றைத் தவறுதலாக எடுத்துச் சென்று விட்டதாக சொல்லுமளவுக்கு ஞானசாரர் புத்திசாலியாக இருக்கின்றார். எனவே அவரது பார்வையில் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் குருடர்கள்.

ஜதிக பலசேன என்ற அமைப்பின் செயலாளர் வட்டரெக்க விஜித தேரர் அன்று தனக்குக் கொடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் காரணமாகத்தான் அவர்களிடத்தில் தப்பித்துக் கொள்ள மன்னிப்புக்கேட்கக் கூடிய நிலை அந்த இடத்தில் தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இப்படிப்பட்ட மிகப்பெரிய ஒரு முறபாட்டாளருடன் விவாதம் பண்ண ஆசைப்படுபவர்கள் நிச்சயமாக மந்தபுத்திக்காரர்களாக , மனநோயாளிகளாகத்தான்  இருப்பார்கள். எனவே துள்ளிக் குதித்து கொண்டிருப்பவர்கள் தப்பித்தவறியாது விவாதத்தில் தோன்றினால் அந்த விவாதத்திற்கு வரும் மனநோயாளிகளை அன்னிய சமூகம் முஸ்லிம் தரப்பு என்று நோக்குகின்ற துரதிஷ;ட நிலையும் இதில் காணப்படுகின்றது என்பதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஞனசாரர் விடயத்தில் அவர் பாணியில் வார்த்தைகளை முஸ்லிம்கள் தரப்பில் வெளியிவோர் விடயத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. அவ்வாறான வார்த்தைகள் முஸ்லிம் சமூகத்தையும் ஞானசாரர் தரத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

No comments

Powered by Blogger.