முஸ்லீம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்..!
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்னாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறோம்.
அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் சொந்தமாகும்.அவனது ஸலாத்தம் ஸலாமும் இறுதித்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர் அன்புக் குடும்பத்தினர்கள். ஆருயிர்த் தோழர்கள். அவரடியில் தொடர்ந்தவர்கள் மற்றும் மறுமை வரை அவர் வழியில் வாழ்பவர்கள் அனைவர்கள் மீதும் உண்டாகட்டும் என்று வேண்டியவனாகத் தொடர்கிறேன்.
இன்னும் அல்லாஹ்வுக்கும். அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் முறண்பட்டுக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (அவ்வாறு முறண்பட்டுக் கொண்டால்) நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள்; அப்போது உங்கள் பலம் குன்றிவிடும்; எனவே (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.(அல்-குர்ஆன்: 8: 46)
பல தசாப்த்தங்களாக நம் சமூகத்தின் மத்தியிலே பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மிக முக்கிய விடயம். அதுதான்
சமூக ஒற்றுமையின் அவசியமும் அதன் அவசரத் தேவையும்.
இது வரலாற்றில் என்றும் இல்லாத அளவு அண்மைக்காலமாக குறிப்பாக முஸ்லீம்களுக்கும். இஸ்லாத்திற்கும் எதிரான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குத் தங்களால் செயல் வடிவம் கொடுக்க இயலாது என்பதனை உணர்ந்த அரசு அதனை செயல்படுத்துவதற்காகவே என்று அரசாலயே உருவாக்கப்டுள்ள பொது பள சேனா எனும் அமைப்பின் தோற்றத்திலிருந்து மிகக் கடுமையாகவே அனைத்துத் தரப்பினர்களாலும் உணரப்பட்டு வருகின்றது.
என்றாலும் இன்றளவும் செயல் வடிவம் பெற முடியாத வெறும் பேசுபொருளாகவே அது இருந்து கொண்டிருக்கின்றது என்பது மிகவும் கவலைக்குரிய கசப்பான உண்மையே. இதற்கான பல முக்கிய காரணங்கள் கூறப்பட்டாலும் பின்வரு காரணிகளை மிக முக்கியமான காரணிகளாகக் குறிப்பிடலாம்
1. அவ்வப்போது கால சூழ்நிலைகளுக்கேற்ப அரசியல்வாதிகளும் ஆண்மீகப் பிரிவுகளும் தங்கள் கொள்கைகளைப் பலப்படித்திக் கொள்ளும் குறுகிய நோக்கத்திற்காக இத்தலைப்பைப் பயன்படுத்தி வந்தமை
2. அவ்வப்போது எங்காவது முஸ்லீம்களுக்குப் பிரச்சினைகள் வரும் போது மட்டும் பேசப்பட்டு அதன் பிறகு வெகு விரைவில் அதனை மறந்து விடுவது
3. நமது சிவில் சமூகம் இது அரசியல்வாதிகள் அல்லது சமூக இயக்கங்களின் வேலை என்றெண்னி சமூகப் பொறுப்பிலிருந்து விலகி இருத்தல்.
இந்நிலையில் சமூகத்தை ஒரே தலைமையின் கீழ் ஒருமுகப்படுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் அரசியல் மற்றும் ஆண்மீகப் பிரிவுகளுக்கப்பால் சென்று அவை அனைத்துத் தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் முஸ்லிம் என்ற ஒரே தலைப்பின் கீழ் ஒரு சிவில் தலைமையை உருவாக்கி அனைத்துத் தரப்பினர்களும் அதன் அடிப்படையில் செயல் பட்டால் மட்டுமே தவிர முஸலீம்களின் தேசிய ஒருமைää தலைமை என்பது அத்தனையும் அசாத்தியமானதே.
இதன் பொருள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கட்ச்சியின் கீழ் வரவேண்டும் என்பதோ அல்லது அரசியலைத் துறக்க வேண்டும் என்பதோ - இயக்கங்களை இல்லாது போகச் செய்ய வேண்டும் என்பதோ அல்ல- மாறாக அவர்கள் எப்போதும் போல் அவரவர் விரும்பிய கட்ச்சிகளில் இருந்து கொண்டு சமூகத்திற்கு தன்னால் ஆன பணிகளை செய்வார்கள்.
அவ்வாறே இஸ்லாமிய இயக்கங்களும்; அவரவர் விரும்பிய இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறும் வகையிலான இஸ்லாமிய அகீதா எனும் அடிப்படைக் கொள்கைக்கு முறன்படாத எந்தவொரு பிரிவையும் சார்ந்திருந்து தேசிய முஸ்லிம் ஒருமைப்பாட்டுக்கு எந்த வகையிலும் பங்கம் ஏற்படாதவாறு தங்களது பணிகளை சமூகத்திற்குச் செலுத்துவார்கள்.
அவ்வாறின்றி ஒவ்வொருவரும் தான் சார்ந்திருக்கும் கட்ச்சிதான் சிறந்தது அனைவரும் அதனைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ அல்லது தான் சார்ந்திருக்கும் இயக்கம்தான் சரியானது ஏனைய அனைத்தும் வழிகேடு எனவே அனைவரும் எம்மோடுதான் ஒன்றிpனைய வேண்டும் என்றோ வாதித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக உலகம் அளியும் வரை நம் சமூகத்தை ஒன்றினைக்க முடியாத துர்ப்பாக்கியசாலிகளாக ஆகிவிடுவோம்;.
எனவே ஒவ்வொரு தனிமனிதனும் இயக்கங்கள் அரசியல் கட்ச்சிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களும் இதனைத் தங்களது தார்மீகக் கடமை என்பதனைப் புறிந்து ஏற்று செயல்பட அல்லாஹ்விக்காக முன் வருதல் இன்றைய காலத்தின் கட்டாயக் கடமையாகும்.
ஆகவே எம்மால் முடியுமான எமது சக்திக்குட்பட்டக் கடமையைச் செய்து அல்லாஹ்விடம் எமது பொறுப்பிலிருந்து விடுபடும் வகையில் நம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இஸ்லாமிய இயக்கங்கள்தொண்டு நிறுவணங்கள்ää அறிஞர்கள்ää சமூக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் போன்றோர்களை அழைத்து இது தொடர்பான தேசிய மட்டத்திலான ஒரு முழுநாள் கருத்தரக்கு ஒன்றினையும் அத்துடன் நாடளாவிய ரீதியில் நாட்டின் பாலபாகங்களிலும் இது தொடர்பான விழிப்புணர்வு மாநாடுகளையும் எதிர் வருகின்ற ரமழான் மாதத்தில்; நடாத்துவதற்குத் தீர்மாணித்துள்ளோம்.
எனவே எம்மோடு இதில் இணைந்து உளத்தூய்மையுடன் பணியாற்றி தங்கள் கடமையையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இதனையும் சீரனித்துக் கொள்ள சக்தியற்ற சகோதரர்கள் தயவு செய்து ஆர்வமுள்ளவர்களையும் அதைரியப்படுத்தி விடாது பார்த்துக் கொள்ளுமாறும் இத்தால் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் தாங்கள் அனைவரதும் ஒத்துழைப்புக்களையும் அறிவுரை ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.
இறுதியாக நமது இந்த சிறு முயற்ச்சியை ஏற்று அதனை நிறைவேற்றி வைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் துனை செய்வானாக. ” ஆமீன்”
والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين والحمد لله ربالعالمين
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்.
Very Good Start and it will be better, if we can publish a point of contact for those who are willing to contribute for this noble effort.
ReplyDeleteIn my opinion Mail contact is safe and easy for the beginning.
May ALLAH help us to purify our intentions and accept our efforts.
Abdul Wahab
jazakumullahu khair
ReplyDelete