செல்வந்தனாக மாற ஆணுறுப்பை கழுதை புலிக்கு தானமாக கொடுத்த இளைஞன்
(Tn) தம்மை செல்வந்தனாக்க உதவும் என்ற அறிவுரையைக் கேட்டு மாலாவி நாட்டு இளைஞன் ஒருவன் தனது பிறப்புறுப்பை கழுதை புலிக்கு உண்ண கொடுத்துள்ளான்;.
இதற்காகவென்று காட்டுக்கு சென்றிருக்கும் இளைஞன் தனது உறுப்பை இழந்துள்ளான். இதன்போது அந்த இளைஞன் தனது மூன்று கால் விரல்களையும் கழுதைப் புலிக்கு உணவாக கொடுத்துள்ளான். சாம்பியாவின் சிப்பாட்டா நகரில் சூனியக்காரர் ஒருவரை சந்தித்திருக்கும் சமங்கனி சுலு என்ற குறித்த இளைஞன், செல்வந்தனாக தமது உடல் உறுப்புகளை பலியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளான்.
20 முதல் 24 வயது இருக்கும் குறித்த இளைஞன் டைம்ஸ் ஒப் சாம்பியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நான் மாலவியில் இருந்து வந்து சிப்பாட்டா நகரில் ஒருசில வியாபாரிகளை சந்தித்தபோது, பணம் சம்பாதிக்க சிறந்த வழி உறுப்பு தானம் செய்வதுதான் என்று அறிவுரை வழங்கினார்கள்.
எனக்கு அறிவுறுத்தப்பட்டதற்கு அமைய நான் நிர்வாணமாக புதர்காட்டிற்கு சென்றேன். அங்கு கழுதைப் புலி ஒன்று வந்து எனது கால் விரல்களை உண்ண ஆரம்பித்தது. பின்னர் அது எனது ஆணுறுப்பையும் தாக்கியது" என்றுள்ளார். இந்த தாக்குதலுக்கு பின்னர் வீதியில் வைத்து பொலிஸாரிடம் சிக்கிய குறித்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
Post a Comment