Header Ads



ஆசிரியர்கள் செவிசாய்க்கவில்லை...!

(சஹாப்தீன்)

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஆசிரியர்களின் விபரங்களை திரட்டுவதற்காக வழங்கப்பட்ட படிவங்களை 93.6 வீதமான ஆசிரியர்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைத்துள்ளார்கள். ஒரு சில ஆசிரியது தொழிற் சங்கங்கள் குறிப்பிட்ட படிவத்தினை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும், ஆசிரியர்கள் அவர்களின் கருத்திற்கு செவிசாய்க்கவில்லை.

இவ்வாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஆசிரியர்களின் எதிர் கால நலநன முன்னிட்டு, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தகவல் தளமொன்றினை ஏற்படுத்துவதற்காக ஆசிரியர்களின் விபரங்களை திரட்டிக் கொண்டிருக்கின்றது. இதற்கு அமைவாக திணைக்களத்தினால் வழங்கப்பட்ட படிவங்களை புறக்கணிக்குமாறு ஆசிரியர் தொழிற் சங்கம் ஒன்று ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்ட போதிலும், ஆசிரியர்கள் அவற்றிக்கு செவிசாய்க்கவில்லை.

இதன் மூலமாகஈ ஆசிரியர்கள் தகவல்கள் திரட்டப்படுவதன் உண்மைத் தன்மையை உணர்ந்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. அத்தோடு, ஆசிரியர்கள் இதனை ஒரு இனரீதியான செயற்பாடாகப் பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 வலயங்களில் 21ஆயிரத்து 167 ஆசிரியர்கள் உள்ளார்கள். இவர்களில் 19 ஆயிரத்து 814 (93.6வீதம்) ஆசிரியர்கள் படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைத்துள்ளார்கள். மீதமாக உள்ள ஆசிரியர்கள் எதிர்வரும் புதன்கிழமை வரை படிவங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று வலயத்தில் 1507 ஆசிரியர்களில் 1340 (88.9 வீதம்)ஆசிரியர்களும், அம்பாரை வலயத்தில் 2041 ஆசிரியர்களில் 1805 (88.4 வீதம்) ஆசிரியர்களும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 1601 ஆசிரியர்களில் 1597 (99.8 வீதம்) ஆசிரியர்களும், மட்டக்களப்பு மத்திய வலயத்தில் 1557 ஆசிரியர்களில் 1343 (86.3 வீதம்) ஆசிரியர்களும், மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 879 ஆசிரியர்களில் 862 (98.1 வீதம்) ஆசிரியர்களும், தெஹியத்தக்கண்டி வலயத்தில் 745 ஆசிரியர்களில் 709 ( 95.2 வீதம்) ஆசிரியர்களும், கல்முனை வலயத்தில் 2075 ஆசிரியர்களில் 2017(97.2 வீதம்) ஆசிரியர்களும், கந்தளாய் வலயத்தில் 776 ஆசிரியர்களில் 753 (97வீதம்) ஆசிரியர்களும், மகோயா வலயத்தில் 514 ஆசிரியர்களில் 511 (99.11வீதம்) ஆசிரியர்களும், மூதூர் வலயத்தில் 1147 ஆசிரியர்களில் 958 (83.5 வீதம்) ஆசிரியர்களும், பட்டிருப்பு வலயத்தில் 1337 ஆசிரியர்களில் 1287 (96.3 வீதம்) ஆசிரியர்களும், திருக்கோவில் வலயத்தில் 741 ஆசிரியர்களில் 741 (100 வீதம்) ஆசிரியர்களும், திருகோணமலை வலயத்தில் 1808 ஆசிரியர்களில் 1556 (86.1வீதம்) ஆசிரியர்களும், கல்குடா கல்வி வலயத்தில் 1386 ஆசிரியர்களில் 1379 (99.5 வீதம்) ஆசிரியர்களும், கிண்ணியா வலயத்தில் 1237 ஆசிரியர்களில் 1199 (96.9 வீதம்) ஆசிரியர்களும், சம்மாந்துறை வலயத்தில் 1404 ஆசிரியர்களில் 1376 (98 வீதம்) ஆசிரியர்களும், திருகோணமலை வடக்கு வலயத்தில் 412 ஆசிரியர்களில் 381 (92.5 வீதம் ) ஆசிரியர்களும் இது வரைக்கும் படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைத்துள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.