Header Ads



சந்திரிக்காவின் கனவு நிறைவேறுமா..?

இரண்டு முறை நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த தனக்கு, மீண்டும் அரசியலில் ஈடுபடும் சந்தர்ப்பம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் தனக்கு அந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய ஹல்மில்லார பிரதேசத்தில்  நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியல் அதளபாதாளத்திற்குள் விழுந்துள்ளது. பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்திலேயே பலர் அரசியலுக்கு வருகின்றனர்.

நாட்டில் காணப்படும் நிலைமையை மாற்ற எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்காது போனால், மக்கள் அதற்கு தீர்வை வழங்குவார்கள் என்றார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அமுல்படுத்தியுள்ள 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி ஒருவர் எத்தனை தடைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட இன்றைய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அந்த சரத்தில் மாற்றங்களை செய்து ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்று சட்டத்தை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


3 comments:

Powered by Blogger.