அம்பாந்தோட்டை என்பது ஒர் விடுவிக்கப்படாத பிரதேசமாகும் - சரத் பொன்சேக்கா பிரகடனம்
அம்பாந்தோட்டை ஓர் விடுவிக்கப்படாத பிரதேசமொன்று என ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டில் விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு விஜயம் செய்யும் போது நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்.
விமான நிலையத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின், அது விமான நிலையமன்று. போதைப் பொருட்கள் கடத்தும் ஓர் இடமாகும்.
அம்பாந்தோட்டையில் துறைமுகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அது கள்ளக் கடத்தல் இடம்பெறும் ஓர் இடமாகும்.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எதிர்நோக்க நேரிட்ட துர்ப்பாக்கிய சம்பவம் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
எனவே, அம்பாந்தோட்டை என்பது ஒர் விடுவிக்கப்படாத பிரதேசமாகும்.
அம்பாந்தோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் இந்த நாட்டின் ஆட்சியாளர் இருக்கின்றார் என சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உண்மைதான் சரத் பொன்சேகாவே!.இலங்கையில் இப்போது எங்கு வேண்டுமானலும் எவரும் போகலாம் அப்படி சுதந்திரமுள்ளது எனக்கூறும் இலங்கை அரசு,ஏன் நாடாளுமன்ற உறுப்பிணார்களை தாக்கவேண்டும்?
ReplyDeleteஎனவே,அங்கு ஏதோ கடத்தல் தடைசெய்யப்பட்ட கேடுகள் இருக்கலாம் என்பதே உண்மை.
ஒழுங்கான எதிர்கட்சி ஒன்று இல்லாத குற்றம்தான் இந்த நாட்டில் பிரச்சினை. அவனவன் நினைத்தமாதிரியெல்லாம் நடக்கிறான். இராணுவம் கற்பழிப்பில் ஈடுபடுவதும். பொலிஸ் கள்ள நோட்டு அடிப்பதுவும் உலகத்தில் எங்காவது இப்படி நடக்கின்றதா.
ReplyDeleteஇதுபோல இன்னும் எவ்வளவு விடயங்கள் கணக்கெடுக்க இருக்கின்றன. என்ன பண்ண?