பொய் கூறுவதை பொதுபல சேனா உடன் நிறுத்த வேண்டும் - அமைச்சர் றிஷாத் பதியுதீன்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மீள் குடியேறும் முஸ்லிம்கள் தொடர்பாகவும் புனித அல்-குர்ஆன் தொடர்பாகவும் பொய்யான கருத்துக்களை கூறு வரும் பொதுபல சேனாவை வன்மையாக கண்டிப்பதாகவும் பொய்க் கருத்தக்களைக் கூறி அப்பாவி மக்களை சங்கடத்திற்கு உள்ளாக்கும் நிலைமைகளை உடன் நிறுத்துமாறும் கைத்தொழில் மற்றம் வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வில்பத்து தேசிய சரணாலயத்தை ஆக்கிரமிப்பது தொடர்பான குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் இன்று (17) மாநாடு அமைச்சரின் தலைமையில் அவரின் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாறுக், முசலி பிரதேசச் செயலாளர், காணித் திணைக்கள அதிகாரிகள், வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை தலைவர் மற்றம் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அமைச்சர் தொடர்ந்து விளக்கமளிக்கையில்..
வடமாகாணத்தில் முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு இரண்ட மணி அவகாசத்தில் வடமாகாணத்தை விட்டு உடுத்திய உடையுடன் விரட்டப்பட்டு சுமார் 22 வருடங்கள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் அகதிகளாக இருந்து 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றிற்குப் பின்னர் மேற்படி வில்பத்து சரணாலயத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிக்கட்டி, பாலைக்குளி, கரடிக்குளி மற்றும் முள்ளிக்குளம் அகிய நான்கு கிராமங்களில் முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்கள் எதுவித உதவிகளும் இன்றி சிறுகச் சிறுக தமது பூர்வீகத்தில் குடியமர்ந்து வருகின்றனர் இவ்வாறு குடியமர்பவர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து தமது வாழ்வைக் கொண்டு செல்கின்றனர்.
இவ்வாறு தமது வாழ்வைக் கொண்டு செல்லும் மக்களுக்கு இன்னும் சரியான காணிப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இந்நிலையில் பொதுபல சேனா முஸ்லிம்கள் வில்பத்து காட்டினை அழித்து தமது வீடுகளை நிர்மாணிப்பதாக குற்றஞ் சாட்டுகின்றமை அப்பட்டமான இனவாதப் பொய்யாகும்.
முஸ்லிம்கள் தமது சொந்தக் காணிகளை விட்டு வெளிமாவட்டங்களில் அகதிகளாக இருந்த வேளையில் 1995 ஆம் ஆண்டு அரசாகணிகளும் முசலிப் பிரதேசச் செயலகப் பிரிவில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட போதிலும் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்ததால் அவர்கள் பயன் பெறவில்லை. எனினும் மீள் குடியேற்றத்தின் பின்னர் அவர்கள் தமது காணிகளை துப்பரவு செய்து வருகின்றனர்.
வில்பத்துக் காட்டினுல் ஒரு அங்குலம் கூட மக்கள் காணிகளைப் பிடிக்கவில்லை மாறாக அவர்கள் வாழ்ந்த சொந்தக்காணிகள் காடுகள் வளர்ந்து காணப்பட்டதனால் அவற்றை அடையாளம் கான வனபரிபால திணைக்களம் மூலம் அனுமதி பெறப்பட்டு விடுவிக்கப்பட்டு நடவடிக்கைள் மேற் கொள்ளப்படுகின்றன.
மறிச்சிக்கட்டி கிராம மக்களின் காணிகளுக்குள் கடற்படையினர் முகாம் அமைத்து இருப்பதால் அப்பகுதி மக்கள் வில்பத்து சரணாலயத்திற்கு பக்கத்தில் உள்ள காணியில் தற்காலிகமாக டெண்ட் அடித்து இருப்பதாகவும் அவர்களிற்கு அரசாங்க அதிபர் மற்றும் பிரதேசச் செயலாளர் ஆகியோர் விரைவாக காணி பெற்றுத் தருவதாகவும் அது கிடைத்தவுடன் தற்காலிகமாக இருக்கும் மறிச்சிக்கட்டி கிராம மக்கள் அங்கு செல்லத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் மறிச்சிக்கட்டி கிராமத்தில் அமைந்தள்ள ஜாசிம் வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட எந்தவொரு மிள்குடியேற்றமும் வில்பத்து சரணாலயத்திற்குள் இடம்பெறவில்லை என்பதனை தன்னால் உறுதிப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்ட அமைச்சர் பொதுபல சேனா கூறுவதுபோல் 22 ஆயிரம் ஏக்கர் காணி அழிக்கப்பட்டதாகவும் இரண்டாயிரம் வீடுகள் கட்டப்பட்டதாகவும் குருட்டுத்தனமாக சொல்வதையெல்லாம் நம்ப முடியாது தேவையென்றால் வன பரிபாலன திணைக்களம், காணி ஆணையாளர் திணைக்களம், அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளிடம் கேட்டுப்பார்க்கட்டும் என்றும் இதற்குப் பிறகு முஸ்லிம்கள் தொடர்பாக பொய்ப்பிரச்சாரம் செய்வது புனித அல்குர்ஆனை கொச்சைப்படுத்துவது அதில் குறிப்பிடப்படாதவற்றைக் கூறுவதையெல்லாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் இதனால் சகல முஸ்லிம்களும் வேதனைப்பட்டுள்ளதாகவும் பொதுபல சேனாவிற்கு அமைச்சார் காட்டமாகத் தெரிவித்தார்.
Post a Comment