Header Ads



புலிகளின் வலையமைப்பினால் இன்னமும் அச்சுறுத்தல் - கோத்தா

சிறிலங்காவில் தற்போது தீவிரவாதம் இல்லையென்றாலும், உலகளாவிய தீவிரவாத வலையமைப்பு தொடர்ந்தும் தடையின்றிச் செயற்பட்டு வருவதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், நடைபெறும் 14வது பாதுகாப்புச் சேவைகள் மாநாட்டில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

விடுதலைப் புலிகளின் வலையமைப்புகள், தமது முன்னணி அமைப்புகளின் ஊடாக, ஜனநாயக முகத்துடன் தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு எதிராக, அனைத்துலக அளவில் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.  அரசியல், ஆதரவு அல்லது மனிதாபிமான உதவிகளுக்காக இந்த முன்னணி அமைப்புகள் குறித்து சில நாடுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. 

அதேநேரம், இந்த வலைமைப்பை இயக்குவோரில் பெரும்பாலானவர்கள் பயிற்றப்பட்ட தீவிரவாதிகள். இன்னமும் சட்டவிரோத செயற்பாடுகளில் தொடர்புபட்டுள்ளவர்கள். 

அத்துடன் இன்னமும் சிறிலங்காவில் தீவிரவாதத்தை புதுப்பிக்க இவர்கள் முனைகின்றனர். அரசல்லாத உலகளாவிய வலைப்பின்னல், இறைமையுள்ள அரசுகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாகவும் உருவெடுத்துள்ளது.  இதனை இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. புலிகளைப் பற்றி இவ்வளவு துணிவுடன் பேசும் நீங்களும் ஒரு பயிற்றப்பட்ட தீவிரவாதி தானே சேர். உங்கள் வலையமைப்பினால் இன்னமும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே.

    ReplyDelete
  2. Why you hide?

    Still there is! .... YES.. That is BBS activity supported by dirties?

    Why do not you find the arrogance of BBS and their terror activities carried out last three years to make these peaceful land back to violence?

    Double standard !

    What BBS HU and Rawana Doing these days to bully the other ethnic Srilankans of this land is more dangerous to the peaceful existance of this sweet land.

    ReplyDelete
  3. Mr.gotha
    From this u try to hife the trrroris activities of BBS.
    Who ever hear this statement of you clearly they can understand ur hided support to BBS. SO U SHOULD CORRECT THIS STATEMENT WITH REPLACE BBS TO THE PLACE OF LTTE. REMEMBER PUBLIC ARE NOT FOOL.THEY ARE VIGILENT.

    ReplyDelete

Powered by Blogger.