Header Ads



கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

( ஏ.பி.எம்.அஸ்ஹர்)

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக தோற்றி சகல மாணவர்களும் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதுடன் ஒரு மாணவன் சகல பாடங்களிலும் ” ஏ” சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதனை முன்னிட்டு சாதனை படைத்த மாணவர்களை   பாராட்டி  கௌரவிக்கும் நிகழ்வு  இன்று  கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வினை ” மீராமுஹைதீன் ( சேனநாயக) நம்பிக்கை நிதியம் ”        ஒழுங்கு  செய்திருந்தது.

சகல பாடங்களிலும் ” ஏ ” சித்திபெற்ற ஜே.ஐ.ஏ. ஸஹ்ரி மற்றும்  8 பாடங்களில் ” ஏ ” சித்திபெற்ற எம்.எம்.ஆபித் அஹமட் ஆகிய மாணவர்களுக்கு தங்கக்காசு ,  மற்றும் பதக்கங்களும்  சகல மாணவர்களுக்கும்   நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

 ஆங்கில மொழிமூலப் பிரிவிற்கு பகுதித் தலைவராகவிருந்த உதவி அதிபர் எம்.எஸ்.அலிகான் மற்றும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் ஆகியோருக்கு  அவர்களது  சேவையினை பாராட்டிஆங்கில மொழிமூல மாணவர்களால்  நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.