கர்ப்பம் தரிப்பதில் மூட நம்பிக்கைகள்
மூட நம்பிக்கைகளைப் பின்பற்றுவதில் படித்த, படிக்காத பெண்கள் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை. குறிப்பாக உடல் நலம், ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் காலங்காலமாகத் தொடர்கிற மூட நம்பிக்கைகளைத் தூக்கி எறிய இன்னும் பல பெண்கள் தயாராக இல்லை. கர்ப்பம் தரிப்பதிலும், கர்ப்பம் தரித்த பிறகும் அவர்கள் கேள்விப்படுகிற பல தகவல்கள் மூட நம்பிக்கைகளின் உச்சமாக இருந்தாலும், அவற்றை ஏற்பதா, மறுப்பதா என்கிற குழப்பமும், தவிப்பும் அனேகம் பேருக்கு உண்டு. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு நம்பப்படுகிற அத்தகைய சில மூட நம்பிக்கைகளைத் தெளிவாக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
உடற்பயிற்சி செய்வது, எடை தூக்குவது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்றவை எல்லாம் கர்ப்பம் தரிக்கத் தடையாக அமை யக்கூடியவை. இந்தக் கருத்து பல பெண்களுக்கும் உண்டு. இதை உண்மையென நம்பிக் கொண்டு, மாதவிலக்கான 15வது நாள் முதல் எந்த வேலையையும் செய்யாமல், உடற்பயிற்சி செய்யாமல், சாப்பிடுவதையும், ஓய்வெடுப்பதையும் மட்டுமே செய்கிற பெண்கள் பலர். கருத்தரிப்பதை இவற்றில் எந்தச் செயலும் தடுக்காது.
மாறாக, வேலையே செய்யாமல், உடலுழைப்பின்றி, ஓய்வெடுப்பதன் விளைவாக உடல் எடை கூடி, ஹார்மோன் சுரப்பில் மாற்றங்கள் உண்டாகி, சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைகள்தான் வரும். மாதவிலக்கு சுழற்சி மாறுபடும். அதன் விளைவாக இயல்பான கருத்த ரிப்பே கூட பாதிக்கப்படலாம்.
அடிக்கடி கொள்கிற தாம்பத்ய உறவினால் கர்ப்பம் தரிப்பது பாதிக்கப்படும். இதுவும் ஒரு தவறான கருத்தே. சிலர் கருத்தரிக்கிற நாளை, நேரத்தை எல்லாம் கணக்கு பண்ணி, உறவு கொள்வார்கள். பொதுவாக 13 முதல் 18 நாளில் கருமுட்டை வெளியாகும். ஒரு சிலருக்கு இதுவும் முறையான மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்களுக்கே கூட 23 - 24 நாட்களில்கூட வெளியாகும். ஆனால், சிலர் 20 நாட்களுக்குப் பிறகே பயந்து கொண்டு உறவைத் தவிர்ப்பார்கள்.
குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்பவர்களுக்கு இருமுறை கருமுட்டை வெளியேறலாம். எனவே தாம்பத்ய உறவு என்பது ஏற்க னவே கரு உருவாகியிருந்தாலும் அதைப் பாதிக்காது. ஸ்கேன், ஐயுஐ போன்ற சிகிச்சைகள் கூட கர்ப்பத்தைப் பாதிக்காது. கொழுப் பான உணவுகள்தான் கருத்தரிப்பை ஊக்கப்படுத்தும். இந்தக் காலத்துப் பெண்கள் பலரும் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் திருமணமாகி வரும் போது, மாமியாரானவர், போஷாக்காக நிறைய சாப்பிட்டால்தான் சீக்கிரம் குழந்தை உண்டாகும், ஒல்லியான உடல்வாகு கருத்தரிக்க ஏற்றதல்ல என்று சொல்லிச் சொல்லியே நிறைய சாப்பிடத் தூண்டுவார்கள். இதுவும் தவறா னது. கருத்தரிக்க புரதம் நிறைந்த உணவுகள் அவசியம். பால் மற்றும் பால் உணவுகள், கருமுட்டை வளர்ச்சியைத் தூண்டக் கூடி யவை என்பதால் அவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அதே போல கர்ப்பம் தரிக்கும் முயற்சியில் இருப்போர் பப்பாளி, அன் னாசி, எள், கருப்பு திராட்சை போன்ற வற்றை சாப்பிடக் கூடாது, அவை கருவைக் கலைக்கும் என்பதும், துரியன் பழம் சாப்பிட் டால் கருத்தரிக்கும் என்பதும்கூட தவறான நம்பிக்கைகளே.
கிராமப் புறங்களில் குழந்தையின் தொப்புள் கொடியைக் காய வைத்துப் பொடித்து சாப்பிட்டால், கருத்தரிக்கும் என்கிற அளவுக்கு பயங்கரமான மூட நம்பிக்கைகளை இன்றும் பார்க்கலாம். உணவு ஊட்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும். கொழுப்பு தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி மேலே சொன்ன அத்தனை தவறான நம்பிக்கைகளையும் நினைத்துப் பெண்கள் பயப்படத் தேவையில்லை... என மூட நம்பிக்கைகளைத் தெளிவாக்குகிறார் மகப்பேறு மருத்துவர்ஜெயராணி.
Post a Comment