Header Ads



மெதமுலனைக்கு வந்தால், அரசாங்கத்தை கவிழ்க்கும் முறையை சொல்லித் தர முடியும் - மஹிந்த


'நாட்டுக்குள் அரேபிய வசந்தம் வருவதாகக் கூறி பொதுமக்களை வீதிக்கு அழைக்கின்றனர். அரேபிய வசந்தம் போன்றவைகளுக்கு நாம் பயமில்லை. வீதியில் இறங்கியே நான் இந்த நிலைக்கு வந்தேன்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

மத்திய வங்கியின் 2013ஆம் வருடத்துக்கான ஆண்டறிக்கை, மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இன்று (08) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இவ்வருடம் மார்ச் மாதத்தில் அரசாங்கம் கவிழும் என கடந்த 10 வருடங்களாக சிலர் கூறி வந்தனர். ஆனால், அப்படியொன்று நடக்கவில்லை. 

மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டியது அவசியம். ஆனால் பலவந்தமாக அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது. 

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் ஹவார்ட் பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தேவையில்லை. மெதமுலனைக்கு வந்தால் அரசாங்கத்தை கவிழ்க்கும் முறையை சொல்லித் தர முடியும்' என ஜனாதிபதி மேலும் கூறினார். tr

1 comment:

  1. "Yaaraium Yaarum Palavanthemaga Kavilka Mudiyaathu" But, Namathu Naattu Muslimkal Mahintha Rajapakshavidkku (Board) Aateravu Valankiyamainalthaan Janathipathiyahinaar So, Anthe Nilaiil Mahinda' Rajavin Athirfaarppu Makkalidam Erunthethu Anavea, Mahinda' Rajavidamtaan Anthe Oru Pirachchenaikkum Makkal Theervai Athir Farpparkal So, Avar Muslikalukku Uriya Theervai Uriya Murail Valankaa Viddaal INSHA ALLAH Avarkal Nichchayam ALLAH Vin Saafaththikkullaha Nearidum (Unmaiyana Markkathil Adavadiththanam, Asinkamana Vaarthai Pirayoogemkal , Oruttarai Innumorrutherudan Moothe Viddu Kealikkai Paarthel Enpana Erukkathu....
    “Evai Anaiththidkkum Meale Asinkamanavarkku Avarkalin Asinkamkal Pulappadaathu Ethu Taan Ethaarthtem”

    ReplyDelete

Powered by Blogger.