Header Ads



பொதுபல சேனாவின் அடாவடி - மௌலவிமாரும், பிக்குமார்களும் விரட்டியடிப்பு..!

(Vi)

ஜாதிக பல சேனா என்ற அமைப்பு இன்று 09-04-2014 புதன்கிழமை  கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டை அங்கு புகுந்த பொது பல சேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தியதோடு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த வந்திருந்த ஒருசில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். 

மன்னார் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வில்பத்து பிரச்சினை உட்பட பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் பக்ஸ் மூலம் அறிவித்திருந்தனர். 

காலை 10.30மணிக்கு ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பிக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அங்கு ஊடகவியலாளர்கள் வந்திருந்தனர். ஊடகவியலாளர் மாநாடு இடம்பெறும் மண்டபத்திற்கு வருவதற்கு முன்பதாக முஸ்லிம் மௌலவிகளும் வட்டரெக்கே விஜித தேரர் தலைமையிலும் ஹோட்டலில் கீழ் தளத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இதன் போதே பொது பல சேனாவின் விதாரன வெனியே நந்த தேரர் உட்பட சிலர் அவ்விடத்திற்கு வந்து பௌத்த குருமாரை பயன்படுத்தி ஊடகவியலாளர் மாநாடு நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்ப்பை வெளியிட்டனர். 

இதற்கு பதிலளித்த மௌலவியொருவர் இதனை ஜாதிக பல சேனா என்ற எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. எனவே நீங்கள் அழைப்பில்லாமல் இங்கு வந்திருக்கிறீர்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். 

பின்னர் இவ்விடத்திற்கு வந்திருந்த பொலிஸ் உயரதிகாரியொருவரும் இக்கருத்தையே தெரிவித்தார். அதன் பின்னர் அங்கு பொலிஸார் பெருமளவில் வந்து சேர்ந்தனர். 

அதன் போது அங்கு கடும் வாக்கு பிரதிவாதங்களும் சலசலப்பும் ஏற்பட்டது. இதன் போது ஆவேசமாக பேசிய நந்த தேரர் பிக்குமார் நடத்தும் கூட்டத்தில் வேறு பிக்குமார் கலந்துகொள்வதை எவராலும் தடுக்க முடியாது என்றார். 

அதனை தடுக்க மௌலவிகளுக்கு அதிகாரம் இல்லை. பௌத்த மதத்தை அகௌரவப்படுத்த இடமளிக்க முடியாது வட்டாரக்கே விஜித தேரர் எங்குள்ளவர் பௌத்தத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டவர். முஸ்லிம்களுக்கு சார்பானவர் எனக் குற்றம் சாட்டினார். இதன் போது அங்கு வந்திருந்த பொலிஸ் உயரதிகாரிகள்  பணம் கொடுத்து ஊடகவியலாளர் மாநட்டை நடத்த ஹோட்டலை பதிவு செய்துள்ளனர். எனவே அதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றார். 

இக்கருத்தை அங்கிருந்த பிரதான மௌலவியொருவரும் தெரிவித்தார். இதனை பொது பலசேனா தேரர்களும் அவர்களோடு வந்தவர்களும் ஏற்க மறுத்தனர். இவ்வாறு ஹோட்டலுக்குள் வாக்குவாதம் சூடு பிடித்துக் கொண்டிருக்கையில்,

அங்கு வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு பேசத் தொடங்கினார். 

முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்குமானால் மௌலவிகள் முஸ்லிம் அமைப்புக்கள் முஸ்லிம் அமைச்சுக்களோடு பேசித் தீர்க்க வேண்டும்.

அதைவிடுத்து காவியுடை தரித்தவர்களை பயன்படுத்த வேண்டாம். இந்த மாநாட்டை நடத்த வந்த வட்டரெக்கே விஜித தேரர் உண்மையான பௌத்தர் அல்ல காவியுடை போட்டுக்கொண்டு முஸ்லிம்களின் பணத்துக்கு விலை போனவர். 

அவ்வாறான ஒருவரை வைத்து மாநாடு நடத்துவதை இடமளிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருக்குமானால் ஜெனீவா போங்கள். உலமா சபை உள்ளது. அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடம் போங்கள் தக்வீத் ஜமாத்தே உள்ளது போங்கள். 

முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேற்றப்படுகிறார்கள் வில்பத்து அழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் மெளனமாக உள்ளனர். ஆனால் நாம் மௌனமாக இருக்க மாட்டோம் என ஆவேசமாக பேசியதோடு அங்கிருந்த மௌலவிமாரை வெளியேற்றினர். அதன் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டில் வந்திருந்த பௌத்த குருமாரிடம் பௌத்த மதம் தொடர்பாக கேள்விகளை கேட்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார். 

பின்னர் சிறிய பிக்குவொருவரிடம் பௌத்த மதம் தொடர்பாக பௌத்த மதம் தொடர்பில் பல கேள்விகள் கேட்டு பதிலளிக்காத நிலையில் முஸ்லிம்கள் காவியுடை போர்த்தப் பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோடு அங்கிருந்த சில குருமார் இவர்களுக்கு சாரத்தை கொடுங்கள் என்றனர். 

அதன் பின்னர் ஊடகவியலாளர் நடத்த வந்திருந்த வட்டரெக்கே விஜித தேரர் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மஹியங்கனைக்கு போக முடியாது என ஞானசார தேரர் தெரிவித்தார். 

பின்னர் வட்டரெக்கே விஜித தேரர் கீழ்கண்டவாறு மன்னிப்பு கேட்டார். 

நான் முஸ்லிம்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக செயற்பட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் மகா சங்கத்தினரிடமும் சிங்கள பௌத்த மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன் என்றார். 

அதன் பின்னர் அத்தேரர் பொலிஸாரால் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து பொது பல சேனாவினர் தாம் வந்த வாகனங்களில் கலைந்து சென்றனர். 

நிப்பொன் ஹோட்டலுக்கு வெளியே மக்கள் கூடியிருந்தார்கள். பொலிஸார் பெருமளவில் ஹோட்டல் வாசலில் காணப்பட்டனர். 

அந்த 1½ மணித்தியாலங்கள் நிப்பொன் ஹோட்டல் வாக்குவாதங்களால் அதிர்ந்தது. முஸ்லிம்களுக்கு தம்பிமாருக்கு பௌத்த சாசனத்தை அழிக்க இடமளிக்க மாட்டோம் எனக் கூறிக்கொண்டு பொது பல சேனாவினர் வெளியேறினர்.   

3 comments:

  1. எங்கே தேர்தல் நேரம் முழங்கிய ஹீரோ ஹக்கீம் அவர்கள், எங்கே ரிஷாத் பதியுதீன் , எங்கே அதவுல்லா. எல்லாம் சந்தர்ப்ப வாதிகள் .

    ReplyDelete
  2. ராஜபக்ச அன் கோ..!!! இது தான் இந்த நாட்டின் நீதி ( அமைச்சர் என்ன செய்கிறாரோ தெரியவில்லை ) நியாயம் சட்டம் ஒழுங்கா????? சோடை போகும் முஸ்லிம் அமைச்சர்களும் எம்பிமார்களும் என்ன சொல்லப் போகுரார்கள்..?????

    இவர்களின் கூத்தை காணொளி மூலம் பாருங்களேன்

    https://www.youtube.com/watch?v=vnfpLBXlhrM

    ReplyDelete
  3. காவியுடை அணியாத போலிஸுகள் உண்மையில் இவர்கள் பொதுபல சேனாதான்.

    இங்கு சீருடையில் வந்த போலிஸுகள் என்ன வேடிக்கை பார்க்கவா வந்தார்கள்?நாட்டில் சட்டம் தூங்குகிறது,,வாங்குகின்ற சம்பளத்திற்கு சரியாக வேளை செய்யாத போலிசுகள் சேவையில் இன்னுமும் இருக்க கூடாது,இருப்பின்,சீருடையை கலைந்து நல்ல வண்ண சாறிகளை அணியுங்கள்.

    அரச ஆசிர்வாதத்தோடு நடந்தேரும் இந்த கூத்துக்களை ஒன்றுமே தெறியாத நல்ல பிள்ளைகளாக நாட்டின் ஜனாதிபதியுமா பார்த்துக்கு இருக்கிறார்?

    பெசென் பக் உடைக்கப்பட்ட போதும்,இந்த போலிசுகள்தான் சும்மா கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்,இதனால் அவர்கள்,சேவையிலிருந்தும் தற்காலிக/நிறந்தர இடைனிருத்தப்பட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.