''அகிலத்திற்கோர் அருட்கொடையக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள்''
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
அகிலத்திற்கோர் அருட்கொடையக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் கருத்தரங்கு ஒன்று இன்று (21) மாலை கலதாரி ஹோட்டலில் ஜனாதிபதி ஆலோசகர் எம்.எம்.சுகைர் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்விற்கு விஷேட பேச்சாளர்களாக பேருவளை ஜாமியா நளீமியா கலா பீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, சப்ரகமுவ பல்கலைக்கழக பீடாதிபதி வணக்கத்துக்குரிய பேராசிரியர் சாகித்திய சக்ரவர்த்தி அக்க மகா பண்டித கும்புறுகமுவ வஜிர நாயக்க தேரர், அல்குர்ஆன் தஃவா அமைப்பின் பணிப்பாளர் பேராசிரியர் டொக்டர் முஹமட் முக்தார் அலா நூஹ், குலோபல் கொமிசன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் டொக்டர் அப்துர்றஹ்மான் பின் ஹமீட் அதுமாமை,; இஸ்லாமிக் கற்கை நிறுவன தலைவர் பேராசிரியர் டொக்டர் அப்துர்றஹ்மான் அல் ஹூஹைப் அல் ஹமடி ஆகியோரும், அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாறுக், விஜித ஹேரத், சோம வன்ஸ்ஸ அமரசிங்க, இஸ்லாம், இந்து, கத்தோலிக்க மற்றும் பௌத்த சமய மத குருக்கள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள், சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் அகில இலங்கை ரீதியான உறுப்பினர்கள், மௌலவிமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
May Allah Bless all, who organize this kind of events in Sri Lanka.
ReplyDeleteஇதனைப்பார்க்க ஏதோ நல்ல விடயமாக தோன்றினாலும் இக்கால கட்டத்தில் சிந்திக்க வேண்டியுள்ளது,அதிலும் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவரின் தலைமையில் நடந்துள்ளதென்றால் மேலும் சிந்திக்க வேண்டும்.
ReplyDeleteசேனாக்களின் வெளிக்கிழம்பல்களால் முஸ்லிம்கள் பட்டுள்ள அவஸ்தையை உலகுக்கு மூடி மறைக்கவும் இதனை ஏற்பாடு பன்னியிருக்கலாம்.ஏன், ஏற்கனவே அதிமேதகு உத்தம ஜனாதிபதி அவர்களும் சில நாட்களுக்கு முன்னால் அறிக்கை விட்டிருந்தார் அதாவது இலங்கையில் மதங்களுக்கிடையில் எவ்வித பிரச்சினையுமில்லை என்று. சிந்தியுங்கள்,அப்படியாயின் ஏன் பொதுபல சேனாவை இங்கு கொண்டுவரவில்லை?