றியாலில் நிதி பெறுபவர்கள் ஜாதிக பலசேனாவா..? டிலான் பெரேரா கேட்கிறார் (வீடியோ)
சர்வதேசத்திற்கு தேவையான வகையில் நாட்டை பிரிக்க ஒருவருக்கும் இடம்தர போவதில்லை என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சில சமய அமைப்புகள் சர்வதேசத்திடம் இருந்து ஆலோசனையையும் நிதியினையும் பெற்றுக் கொண்டு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு யூரேவிலா, டொலரிலா? நிதிபெறுகிறார்கள், அவர்களது பெயர் பொதுபலசேனாவா? இல்லையோல் றியாலில் நிதி பெறுவர்கள் ஜாதிக பலசேனாவா? இவை இரண்டும் பாரம்பரரிய பௌத்த மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் செயற்படுகின்றன என குறிப்பிட்டார்.
Post a Comment