Header Ads



லசித் மலிங்க கிண்ணத்தை எடுக்கும் போது, தி​னேஸ் சந்திமாலின் பதில்..!


இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தி​னேஸ் சந்திமல்லிடம் NF க்கு வழங்கிய  பிரத்தியேக

செவ்வியின் போது பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

1.இலங்கை இருந்து செல்லும் போது வெற்றி கொள்வீர்கள் என்று நினைத்தீர்களா?

ஆம், எமது வீரர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். நாங்கள் போட்டிகளில் பங்கு கொள்ளும் ​போது தரப்படுத்தலில் முதல் இடத்தில் இருந்தோம் எமது வீரர்கள் உளரீதியாக உயர் மட்டத்தில் இருந்தனர்.

2.இறுதிப் போட்டியில் வெற்றியின் பின்னர் என்ன நினைத்தீர்கள்?

மிகவும் மகிழ்சியாக இருந்தது. உலக கிண்ணம் என்பது இலகுவான விடயம் அல்ல எமது வீரர்கள் ஆரம்ப போட்டி முதல் மிகுந்த ஈடுபாட்டுடன் விளையாடினர். 18 வருடங்களின் பின்னர் இந்த உலக கிண்ணத்தை நாட்டுக்கு கொண்டுவந்தமை மிகுந்த மகிழ்சி அளிக்கின்றது.

3. மலிங்கவின் தலைமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

அவர் சிறந்த தலைவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் சிறந்த தலைமையை வெளிப்படுத்தினார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதவியை வகிக்க முடியாது என தெரிவிக்கின்றனர் அதற்கு எதிராக அவர் சிறந்த பதிலடி கொடுத்துள்ளார். போட்டிகளின் போது எவ்வாறு கிண்ணத்தை எவ்வாறு கிண்ணத்தை பெற்றுக்கொள்வதே மனதில் இருந்தது அதனால் தான் அணியில் திரிமான்னவை இணைத்து நான் விலகிக் கொண்டேன் அது இறுதியில் வெற்றியாக அமைந்தது.

4. கிண்ணத்தை மலிங்க எடுக்கும் போது என்ன நினைத்தீர்கள்?

எனக்கு மகிழ்ச்சி அடைந்தேன் இது எமது கனவாக இருந்தது சில சமயங்களில் கண்ணீர் வந்தது.

5.தலைவர் என்ன வகையில் சிரேஷ்ட வீரர் அளித்து வரும் உதவிகள் பற்றி?

எமக்கு மிகுந்த உதவியாகவுள்ளனர் எமது அணியில் நான்கு தலைவர்கள் இருந்தனர். எந்த நேரத்தில் எவ்வாறுவிளையாட வேண்டும் என்பது போன்ற விடயங்களை எமக்கு கற்றுத்தந்துள்ளனர். எனக்கு இவ்வாறான வீரர்களின்கீழ் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. கற்று கொண்ட விடயங்களை எதிர்கால இளம் வீரர்களுக்கு பகிர்ந்து கொள்ளவுள்ளோன்.

6. நீங்கள் நினைக்கவில்லையா தலைமை உங்கள் துடுப்பட்டத்தில் தாக்கம் செலுத்தும் என்று?

இல்லை. நேற்று, இன்று தலைமைத்துவத்தை வகிக்கவில்லை பாடசாலை, விளையாட்டு கழகம் மற்றும் இலங்கை ஏ அணி என  நான் பல சந்தர்ப்பங்களில் தலைமை பொறுப்பை வகித்துள்ளேன்.

7. 1996 உலக கிண்ணம் மற்றும் இன்று பெற்றுள்ள உலக கிண்ணத்தை நினைத்துப்பார்த்தால்?

அன்று எனக்கு 7 வயது நான் உறவினர்  வீட்டுக்கு சென்றுதான் போட்டியை பார்த்தேன் இலங்கை அணி வெற்றிபெற்றதன் பின்னர் நான் அப்பா,அம்மா  ஆகியோருடன் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன் ஆனால் இன்று வெற்றிபெற்ற அணியில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது

8.உங்களுடைய எதிர்கால திட்டம் தொடர்பில்?

நான் அணியில் எவ்வாறு தொடர்ச்சியாக  இடம்பிடித்துக்கொள்வது இலங்கை அணிக்காக என்னால் என் செய்யமுடியுமோ அதை செய்வதே எனது நோக்கம்.

No comments

Powered by Blogger.