Header Ads



நீதியமைச்சர் பதவியிலிருந்து கொண்டு ரவூப் ஹக்கீம் செய்த பாரிய தூரோகம்..!


எதிரிகளின் ஜெனிவா நடவடிக்கைக்கு அமைய உத்தேச சர்வதேச விசாரணை என்ற பொறிக்குள் கால் வைத்தால், இலங்கை இந்து சமுத்திரத்தின் கண்ணீர் துளியாக மாறிவிடும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று 06-04-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்காவினால், ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட யோசனை குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தேசிய சுதந்திர முன்னணி தனது நிலைப்பாட்டை வெளியிட வேண்டியுள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் இலங்கைக்கு எதிரான யோசனையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை இந்த யோசனையை நிராகரித்திருந்தாலும் இலங்கையை அதற்கு இணங்க வைக்க பல்வேறு திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா போன்ற நாடுகள் இதற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளன. அரசாங்கத்திற்குள்ளும், இராஜதந்திர துறையிலும் பல்வேறு வேஷங்களில் இருக்கும் “றோ”புலனாய்வுப் பிரிவின் ஒற்றர்களை இந்தியா இதற்காக பயன்படுத்தி வருகிறது.

தயான் ஜயதிலக்கவும் அப்படியான ஒருவர். இந்தியா இம்முறை ஜெனிவாவில் வாக்களிக்காதது குறித்து உச்சத்தில் வைத்து வர்ணித்து வருகிறார். தருஸ்மன் அறிக்கையில் ஆரம்பித்த இலங்கையின் கழுத்துக்கு பொறி வைக்கும் நடவடிக்கைக்கு அமெரிக்காவை போன்று பங்களிப்பு வழங்கிய நாடு இந்தியா. 2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஜெனிவா யோசனைகளுக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது மாத்திரமல்லாது ஏனைய நாடுகளை அதற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தது.

இந்த நிலையில், 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் பிரிவினைவாத அதிகாரங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையான தார்மீக அதிகாரத்தை கட்டியெழுப்பவே இந்தியா இறுதியாக தற்போது முயற்சித்து வருகிறது.

தோட்டாவுடன் துப்பாக்கியை கொடுத்து ஒருவரை சுட்டுக்கொல்லுமாறு கூறிவிட்டு, அந்த நபர் இறந்த பின்னர், நான் கொலைகாரன் இல்லை என்ற குற்றவாளியின் பாத்திரத்தையே இந்தியா தற்போது ஏற்று நடிக்க ஆயத்தமாகி வருகிறது. தயான் ஜயதிலக்க என்பவர், இலங்கையின் மனித உரிமை மேம்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளில், பிரிவினைவாதத்தை வலுப்படுத்தும் வகையில் பரிந்துரைகளை முன்வைத்த வெளிவிவகார அமைச்சின் ஆலோசகர். இந்தியாவின் தேவைக்கு அமைவான திசை நோக்கி இலங்கையை தள்ளுவதே அவரது தேவையாக இருக்கின்றது.

இந்தியாவின் இந்த தந்திரத்திற்குள் இலங்கை சிக்கினால், ஆரம்பம் முதல் ஜெனிவா நடவடிக்கைக்கு எதிராக இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வந்த நாட்டின் உண்மையான நண்பர்களான சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எம்மை விட்டு விலகி செல்லும். இவ்வாறான நிலைமைக்குள் இலங்கை தள்ளிவிடும் தேவையே “றோ)” ஒற்றர்களுக்கு உள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள் அமெரிக்கா நிறைவேற்றியுள்ள யோசனைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கூறி வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற ஜெனிவா யோசனைக்கு ஆதரவு பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையின் நீதியமைச்சர் சர்வதேச விசாரணையை கோருகிறார் என்ற சர்வதேச நிலைப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரவூப் ஹக்கீம் நீதியமைச்சர் பதவியில் இருந்து கொண்டு செய்த பாரிய தூரோகம் இதுவாகும். இவ்வாறான நிலைப்பாட்டை உருவாக்கி அரசாங்கத்தை சர்வதேச விசாரணை என்ற பொறிக்குள் தள்ளுவதே ரவூப் ஹக்கீம் போன்றவர்களின் நோக்கம்.

அரசாங்கம் இதுவரை சரியான நிலைப்பாட்டில் இருந்து ஜெனிவா நடவடிக்கையை எதிர்கொண்டது. எப்படியான அழுத்தங்கள் வந்தாலும் அந்த நிலைப்பாட்டில் வலுவாக தொடர்ந்தும் இருக்க வேண்டும்.

அமெரிக்கா உட்பட மேற்குலக சக்திகள் சுதந்திரமான விசாரணைகளை நடத்த முயற்சிக்கவில்லை. தருஸ்மன் அறிக்கை அதேபோல் நவநீதம்பிள்ளையின் அறிக்கைப்படி இலங்கை போர்க்குற்றவாளி என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

அமெரிக்காவே சர்வதேச விசாரணை குழுவை நியமிக்கும். அவர்கள் தெரிவு செய்துள்ள விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

விசாரணைக்கான அனுமதியை பெறுவதற்காக நவநீதம்பிள்ளை, அதனை ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார் எனவும் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. எமது 'முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள்'...........? ? ? ? ? ? ? ? ? ? ? ?

    ReplyDelete
  2. U r the one always doing the negative impact on muslim's cause, the selfish statements releasing everyday, try to do a gentleman politics if you are a islamic gentleman.

    ReplyDelete
  3. POOR KURRAMGAL PURIYA VILLAI ANRAAL AAN PAYPPADA VEENDUM VEENAKA AVARAYUM IVARAYUM KURAI KURIKKURI IRUKKAMAL DAIRIYAMAKA MUKAM KODUKKAWEENDIYADU TAANY JANADIPADY AWARKAL DAIRIYAMAAKATANY ERKKIRAR MUZAMMIL AANKOLAYAAKIREER

    ReplyDelete
  4. AMADU AMCCAR MAARKALEE ORUTTARAI ORUTTAR KURAI TAEDUWADAIYEE WEELA YAAI POOITTU

    ReplyDelete
  5. எமது அமைச்சர்மார்களே, ஒருத்தரை ஒருத்தர் குறை காண்பதை விட்டிவிட்டு ஆக்கபூர்வமான காரியங்களிப்பற்றி யோசியுங்கள்.

    அக்கறையுள்ள இலங்கை மகன்.

    ReplyDelete
  6. இவர் தேர்தல் பிரச்சாரமே ஹக்கீமை குரைகூருவதில்தான் ஆரம்பித்தது இது இன்னும் முடிந்தபாடில்லை பொதுபலசேனா தற்போது முஸ்லிம் குடியேற்றங்கள் மீது பார்வையை திருப்பியுள்ளது இன்னும் பல பிரட்சனைகள கிளப்புகின்ரது அது பற்றீ விமர்ச்சிக்கமுடியாது ஆனால் இவர் பார்வை மட்டும் இன்னும் ஹக்கீம் பக்கமேயுள்ளது இவர்கள்தான் முஸ்லிம்பிரதிநிதிகள் ரெம்பகேவளம்

    ReplyDelete

Powered by Blogger.