Header Ads



குமார் சங்கக்கார அரசியலுக்கு வருவாரா..?

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் வீரர்களுக்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சங்ககார உரையாற்றி கொண்டிருந்த போது, “சங்ககார, நாடாளுமன்றத்திற்கு வரும் காலம் கனிந்துள்ளதாக” ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கூறியுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட சங்ககார சிறந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் இந்த கருத்துக்களுக்கு எந்த பதிலையும் வழங்காத சங்ககார சிரித்ததாக கூறப்படுகிறது.

1 comment:

  1. அரசியலில் ஈடுபடுவதற்கு எந்தவொரு குடிமகனுக்கும் உரிமையுள்ளபோது, பிரபலமும் தலைமைத்துவப் பண்பும் செல்வாக்கிற்கு மயங்காமல் எதையும் சீர்தூக்கிப் பார்த்து எடைபோடக்கூடிய இயல்பும் சிறந்த பேச்சாற்றலும் கொண்ட ஒரு கிரிக்கட் வீரரான சங்கக்கார அரசியலுக்கு வருவதிலே தவறு ஒன்றுமில்லை. தவிர சங்கக்ககாரவின் குடும்பம், நாட்டின் அத்தனை இனங்களுக்கும் சமத்துவமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட ஒரு படித்த குடும்பம். அவரது தந்தை 1983 கலவரத்தில், அச்சுறுத்தலாக இருந்த பேரினவாதக் காடையர்களைக் கூட பொருட்படுத்தாமல் பல தமிழ்க் குடும்பங்களை கண்டியிலுள்ள தன் சொந்த வீட்டில் தங்க வைத்திருந்து உயிர்காத்த உத்தமர்களில் ஒருவர்.

    அரசியலுக்கு வந்தால் சாக்கடை அரசியலைப் புரியாமல் நேர்மையும் கௌரவமுமான அரசியல்வாதியாக நிச்சயம் இருப்பார் என்று நம்ப முடியும். அவ்வாறு இருக்க முடியாது என்று கருதினால் சங்ககக்கார அரசியலுக்கு நிச்சயம் வரமாட்டார் என்றே தோன்றுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.