Header Ads



பதுங்கியிருந்து பாய்வதற்கா..?

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கை நாட்டில் சட்டம் தொடர்பில் பேசுவதற்கு பொதுபல சேனா அமைப்புக்கு என்ன அருகதை இருக்கின்றது என்ற கேள்விக்கு பதில் தேடும் நிலை உருவாகியுள்ளது.எமது நாட்டினை பொறுத்தவரையில் முறைப்பாடுகளை  பதிவு செய்யும் திணைக்களமாக பொலீஸ் நிலையமே காணப்படுகின்றது.ஆனால் பொதுபலசேனா ஜனாதிபதியிடமே தமது முறைப்பாட்டையனுப்பியுள்ளதாக வெளியான ஊடக செய்தி தொடர்பிலும் சந்தேகங்களும் எழுந்துள்ளன.

மிகவும் ஆக்கிரரோஷமாக பேசியவந்த பொதுபலசேனாவின் ஞானசார தேரர் திடீரென தமது கருத்தை மாற்றியுள்ளமை அச்சத்தினாலா ? அல்லது பதுங்கியிருந்து பாய்வதற்கா? என்றும் பார்க்க வேண்டும். குறிப்பாக தனது டிரண்டை மாற்றியமை தொடர்பில் அமைப்பு ஒன்று ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளது.பொதுபலசேனா பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் உள்ளீர்க்கப்பட்டது இலங்கை அரசாங்கத்துக்கு புதிய வடிவிலான நெருக்குவாரங்களை ஆதிகரித்துள்ளது.டிரக் அமைப்பு என்பது சர்வதேச ரீதியில் பயங்கரவாதம் தொடர்பிலான ஆராய்ச்சிகளையும்,அந்த அமைப்பின் குணாதிசயங்கள் என்பனவற்றை ஆராய்ந்துவரும் ஒரு பேசப்படும் அமைப்பாகும்.

அதே வேளை இலங்கைக்குள் தற்போது பொதுபலசேனாவுக்கு எதிராக  பேசப்படும் அமைப்புக்களினது எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதே வேளை மற்றும் அரசியல் தலைமைகள் பேச ஆரம்பித்துள்ளமையும் அவர்களுக்கு தர்ம சங்கடத்தினை ஏற்படுத்தலாகியுள்ளது.அரசன் அன்று கொள்வான் தெய்வன் நின்றே கொள்ளும் என்ற பழமொழிக்கு ஒப்ப பொதபலசேனாவுக்கு சோதனை காலம் ஆரம்பித்துள்ளது என்றே கூறவேண்டும்.இந்த நிலையில் தற்போது பொதுபலசேனா தெரிவிக்கும் இந்த நாட்டுக்குள் பிரச்சினை இருந்தால் அதனை நாம் பேசி தீர்ப்போம்,எதந்காக சர்வதேசத்திடம் இது குறித்து முறையிட வேண்டும் என்று எழுப்பியுள்ள கேள்வி ஒருவகையான பேதலிப்புக்குள் அவர்களை ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் வாழும் முஸ்லிம்களை அவமானப்படுத்துவதன் மூலம் சர்வதேச பணம் படைத்த இஸ்லாத்தின் எதிரிகளின் ஆரவனைப்பை தற்போதே பெற்றுக் கொண்டுள்ள பொதுபலசேனா அதனை மேலும் பலப்படுத்திக் கொண்டு இலங்கைக்குள் மதச் சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகளை ஏற்டுத்துவதன் மூலம் சடவாத கொள்கைகளுக்கு மட்டும் மக்களை ஆட்படுத்த முனைவது தான் தற்போது நிகழ்ச்சி நிரலில் முதன்மையாகும். அதற்குள் தோல்வியினை சந்தித்த  பின்பும் புதிய கூட்டுக்களை இணைத்துக் கொள்ளும் வகையில் தற்போது ஸ்ரீடெலோ அமைப்பின் உதயராசா வெளியிட்டுள்ள பொதுபலசேனா சார்பு கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையினை அது கொண்டுள்ள நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

அப்படியெனில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான மற்றுமொரு அமைப்பு அதரவை வழங்கியுள்ளதை புரிந்து கொள்ள முடிகின்றது.ஒரு பக்க எதிர்ப்பினை சந்தித்த சமூகம் இனவாதத்தின் மற்றுமொரு முகப்பினை புதிய வடிவில் சந்திக்க ஆரம்பித்துள்ளது.இந்த நிலையில் இனியும் நாம் ஒன்றுபட்டு செயற்படத்தவறுவோமெனில் இதிலிருந்து மீளுவதற்கு எந்தளவுக்கு சாத்தியமாகும்.

No comments

Powered by Blogger.