ஜெனிவா தீர்மானத்தை முறியடிக்கும் மூலோபாயத்தை வகுக்க திட்டம்..!
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தாக்கம் தொடர்பாக, அரசாங்கம், கல்வியாளர்கள், வர்த்தக சமூக, சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்த முடிவு செய்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் மூலம் பெறப்படும் ஆலோசனைகளின் மூலம், ஜெனிவா தீர்மானத்தை முறியடிக்கும் மூலோபாயத்தை வகுத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் ஒரு தேசியப் பிரச்சினை என்றும், அதனை எதிர்கொள்வதற்கு, இந்தக் கலந்துரையாடலில் பெறப்படும் ஆலோசனைகள் அரசாங்கத்துக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், கல்வியாளர்கள் குழுவை சந்திக்கவுள்ளார். அதையடுத்து, வர்த்தக மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
Post a Comment