தென்கிழக்கு பல்கலைக்கழக அஷ்ரப் நூலகத்தை பொது மக்களும் பார்வையிடலாம்..!
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தை பொது மக்கள் பார்வையிட
சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பிற்பகல் இரண்டு மணி முதல் இரவு பத்து மணிவரைக்கும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. இன் நூலகத்தை மக்கள் பார்வையிடுவதில் அதிக நாட்டம் கொண்டு தென் கிழக்கு பல்கலைக்கலகத்திற்கு பெருமளவிலான மக்கள் தினமும் வருகை தருகின்றனர். அதேவேளை எமது பாரம்பரியங்களையும், முதுசங்களையும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கலாசார அரும்பொருட்சாலையையும் பார்வையிட சந்தர்பம் வழங்கப்பட்டுள்ளது.
இன் நூலகத்தை பொதுமக்கள் பார்வைக்காக இம்மாதம் 25ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரைக்கும் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக நூலகர்
எம்.எம்.றிபாயுத்தீன் தெரிவித்தார்.
இன் நவீன நூலகத்தில் 120,000 புத்தகங்களும்,1200 இறுவட்டுக்களும்,275 கல்விசார் பருவ வெளியீடுகளும் பல புலமைசார் தரவுத்தளங்களையும் மேலும் பல விசேட, அரிதான சேகரிப்புக்களும் காணப்படுவதுடன் ஒரே நேரத்தில் 400 மாணவர்கள் உசாத்துணை செய்வதற்கும் வாசிப்பதற்கும் தேவையான 400 இருக்கைகளை கொண்டுள்ள ஒரு நவீன நூலகமாக அஸ்ரப் ஞாபகார்த்த நூலகம் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Post a Comment