Header Ads



பாகிஸ்தானின் உதவிக்கரம் - மனம்நெகிழ்ந்து பாராட்டினார் ஜனாதிபதி மஹந்த


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவைக் காப்பாற்றப் போராடிய, பாகிஸ்தானுக்கு, மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தொலைபேசி மூலம், தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு ஆதரவாக தீவிரமாகச் செயற்பட்டதற்காக நன்றி கூறியுள்ளார். 

ஐ.நாவுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி சமீர் அக்ரமுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார். 

முன்னதாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மகிந்த ராஜபக்சமுயன்றிருந்தார். 

ஆனால், அப்போது ஷெரீப் லண்டனில் இருந்ததால், தொடர்பு கொள்ள முடியவில்லை. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, எதிர்த்து பாகிஸ்தான் பிரதிநிதி கடுமையான போராட்டம் நடத்தியிருந்தார். 

அனைத்துலக விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டை காரணம் காட்டியும், தீர்மானத்தின் 10வது பந்தியை நீக்கும் திருத்த யோசனையை முன்வைத்தும், தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கவும், வலுவிழக்கச் செய்யவும் சமீர் அக்ரம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.