பொதுபல சேனாவுக்கு எதிராக கட்டாரில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுகூடுகிறார்கள்..!
ஏற்கனவே அறிவிக்கப்பட்தற்கமைய கட்டார் வாழ் இலங்கை முஸ்லிம்களின் ஒன்று கூடல் எதிர்வரும் வியாழனன்று மாலை இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கட்டார் வாழ் முஸ்லிம்களே இந்த இலத்தை தொடர்பு கொண்டு மேலதிக விபரத்தை பெற்றுக்கொள்ள முடியும் - கலீல் முஹம்மது ரிஸ்வான் - 00974 - 33916838
இலங்கை முஸ்லிம்கள் தொடர்சியாக துன்புறுத்தப்பட்டு வரும் இக்கால கட்டத்தில் அதன் பின்னணியில் இயங்கி வரும் பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள கட்டார் வாழ் இலங்கை முஸ்லிம்கள் தமது செயற்பாட்டில் இணைய விரும்பும் கட்டார் வாழ் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
பொது பல சேனா அமைப்பின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மௌனமாக அரசாங்கம் ஊக்குவித்து வரும் நிலையில் சர்வதேச அழுத்தத்தை குறிப்பாக கட்டாரில் செறிந்து வாழும் இலங்கை முஸ்லிம்களின் குரல்களை ஒன்றிணைந்து கட்டார் அரசியல் உயர் பீடத்தை அணுகுவதும் அதேவேளை ஏனைய அரபுநாடுகளும் இவ்விடையத்தின் பாரதூரமான விளைவுகள் பற்றிய தகவல்களை கொண்டு செல்லும் நோக்கில் இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் பங்கு கொள்ள எதிர் வரும் வியாழன் மாலை சினையா மார்கஸ் (SINAYYA MARKAS) ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலதிக தொடர்புக்கு கட்டார் :- கலீல் முஹம்மது ரிஸ்வான் - 00974 - 33916838 எனும் தொலை பேசியூடாக தொடர்புகொள்ள முடியும்
யா அல்லாஹ் இந்த முயற்சிக்கு எல்லாம் வள்ள அல்லாஹ் அருள்புரிவானாக.
Post a Comment