கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்
(ஏ.எல்.ஜனூவர்)
மஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும் நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வரும் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும் 19.04.2017 (இன்று) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
இவ் நடமாடும் சேவை அட்டாளைச்சேனை 03,04,05,12,13,14,15,16 ஆம் பிரிவு மக்களுக்கு நடாத்தப்பட்டது. பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு துரைசார்ந்த அதிகாரிகளினால் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டார் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், அக்கரைப்பற்று கல்வி வலயப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எஸ்.எல்.முனாஸ், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிறைவான இல்லம் வழமான தாயகம் எங்கிருந்து வருமாம்?தூங்கி எழும்பினால் ஒரு புது சிந்தனை அதுதான் மகிந்தவின் சிந்தனை.இன்று என்ன பொருளுக்கு விலையை ஏற்றலாம் என்பதும் அவரது சிந்தனைகளில் ஒன்று.
ReplyDeleteவேசம் போட்டவர்கள் அது என்ன சிந்தனை என்றாலும் குறைத்துதான் ஆகவேண்டும் இல்லையேல் எஜமான் கம்பெடுப்பான்.
நாட்டின் வரவுக்கும் வளத்திற்கும் ஏற்ப மக்களுகின் சுமைகளை இறக்குவதே ஒரு அரசின் வேளை.உலகில் பல நாடுகளை எடுத்துக்கொண்டால் அங்கே சில தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.ஆக,ஒரு அரசு என்பதோ,சிந்தனை என்பதோ மக்களை மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இருக்ககூடாது.