Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையம் குறித்த ஒரு விமர்சனம்..!

ஒரு சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி, எழுத்துக்களுக்குண்டு என்பதை யாரும் அறியாமலில்லை. இதனையே கடந்த கால அரபுலக போர்கள் (ஈராக், லிபியா, எகிப்து, எமன் இப்படி பல நாடுகள்) எமக்கு சான்று பகர்கிறது. எழுத்தூடகங்களினூடான மக்களுக்கான அரைகூவலும் தட்டிக்கொடுப்புமே மக்களை ஆழ்ந்த உறக்கத்திலிருந்தும் இந்த நாடுகளில் அவர்களை எழுந்துகொள்ள செய்தது என்பதை உலகமே அறியும்.

ஒரு சமுதாயம் சமுதாயமகா இருக்கும் வரைக்கும் எவரும் அதை அசைத்திட முடியாது. வழிதவறிய ஒரு சமுதாயத்தை மீட்டெடுக்கும் பொறுப்பும் எமக்குண்டு. அந்த வகையில் கோமா நிலையில் வாழும் எம் இலங்கை மக்களை எப்படியாவது சுய உணர்வுக்கு கொண்டுவந்து சேர்ப்பது நம்மில் சிலரின் கடமை. இதனை தனிப்பட்ட ஒருத்தரால் செய்துவிடமுடியாது, பலரும் இந்த உண்மையை அறிந்து கூட்டாக செயற்படும்போது மட்டுமே ஏதோ ஒன்றை சாதிக்கமுடியும் என்பது பலரும் அறிந்த உண்மை. இறைவன் வகுத்த பாதையை விட்டும் மனிதன் விலகிச்செல்லும்போது நிச்சயம் மனிதன் என்பவன் பல இடர்களை அவனது பயனத்தில் கண்டுகொள்வான். இறைவனின் பாதையை மறந்த எம் மனிதர்களை ஞாபகப்படுத்தி மீண்டும் அந்த பாதைக்கு கொண்டுவந்து சேர்ப்பது எம் கடமை. 

ஒரு பொது ஊடகம் என்ற வகையில் ஜப்னா முஸ்லிமால் எல்லா செய்திகளையும் மார்க்கத்தை சம்பந்தப்படுத்தி சரிபிழை கண்டு எழுதிடமுடியாது. ஏனெனில் அது ஒரு மதசார்பான ஊடகமுமில்லை. இருப்பினும் வாசகர்களாகிய நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களையாவது பஞ்சமின்றி தடையின்றி பிரசுரிக்கலாமல்லவா..? இன்று சுதந்திரமான எழுத்தாக்கம் கொண்ட, பலராலும் பார்வையிடப்படுகின்ற, வாசகர்களின் உணர்வுக்கும் கருத்துக்கும் இடமளிக்கின்ற ஊடகமே ஜப்னா முஸ்லிம்தான். ஆகையால் எப்பொழுதும் தன் கடமையை சரிவர செய்ததாக அது அமைதல் வேண்டும்.

ஆனாலும், சொற்ப அளவிலேயே மதம் சார்பான பின்னூட்டங்கள் தங்களின் வலையமைப்பில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும், பின்னூட்டங்களுக்கு பொருப்பான ஜப்னா முஸ்லிம் அதிகாரி, ஏதோ ஒரு ஹுப்புல் அவ்லியா மத இயக்கத்தை மட்டும் சார்த்தவர் போலும் தெறிகிறது. குறிப்பாக மிக அண்மையில் நடந்த அஸ்வர் எம்பி. ஜனாதிபதிகள் கலந்துகொண்ட, அவர்களால் திறந்துவைக்கப்பட்ட தரீக்கா சம்பந்தமான உங்கள் செய்திக்கு நானும் கொடுத்த பின்னூட்டங்கள் இன்று வரையில் மக்களுக்கு சென்றடையவில்லை. இனைவைத்தல் இறைவன்பால் மண்ணிக்கப்பட முடியாத குற்றம். இதனை நாங்கள் வழிகேட்டில் செல்லும் நம்பிக்கை கொண்டவர்களை விளங்கவைப்பதும் கடமை. ஊடகம் என்ற வகையில் உங்களால் சரி பிழையை எழுதமுடியாது. நீங்கள் ஜப்னா முஸ்லிம் எங்களுக்காக விட்டு செல்லும் இடைவெழியை வாசகர்களாகிய நாங்களே நிரப்பவேண்டும்.

மீண்டும் மனிதன் எப்போது அவனது மார்க்கத்திற்கு வருகிறானோ, அப்போதே,அவனுக்கான அனைத்தும் சீராக திறந்துவிடப்படும். இதனால், மார்க்கத்தை பின்னூட்டங்களால் எடுத்து சொல்லப்போய், மக்களும் மனம் மாறி, மக்களுக்கான ஆட்சியும் மக்களின் விருப்புக்கு ஏற்ப நிச்சயம் மாறிவிடும்.

இன்று மதத்தை மறந்து அற்ப சுகத்திற்காக பணத்திற்காக மக்களை ஏமாற்றி பொய்சொல்லி காலத்தை கடத்தும் சம்பாதிக்கும் இலங்கை அரசியல் வாதிகள் ஏராளம், தாராலம். துரதிஷ்டவசமாக இன்று இலங்கையில் சகல இன மக்களும் வெளியில் சொல்லமுடியாத வாழ்க்கை கஷ்டத்தில் உள்ளார்கள் என்பது நாம் சொல்லி தெறிய தேவையில்லை.

முஸ்லிம் பள்ளிவாயல்கள் எதுவும் உடைக்கபடவில்லை என்ற ஜனாதிபதியின் அன்றைய உங்களது செய்திக்கு, நம் சகோதரர்கள் ஆக்கிறோசமடைந்து கொடுத்த தொடர்சியான பின்னூட்டங்கள் அனைத்தும் நகைச்சுவையாகவும், பெருமதியுள்ளதாகவும், ஒருத்தரை ஒருத்தர் உட்சாகப்படுத்துவதாகவும் அமைந்தது, இத்தனைக்கும் ஜப்னா முஸ்லிமின் மெச்சத்தக்க வாசகர்களுக்கான திறந்துவிடப்பட்ட பின்னூட்ட வசதியே காரணம், இந்த வசதி எக்காலும் வரையருக்கப்பட்டதாகவோ, பக்கசார்பானதாகவோ இருக்ககூடாது என்பதே எங்களின் வேண்டுகோள்.

ஒருவூடகம் என்ற வகையில், தனிமுஸ்லிம்களுக்கு மட்டும் கலமமைக்கப்பட்டதாகவும் ஜப்னா முஸ்லிம் இருத்தல் கூடாது,அது பல இன சகோதர மக்களையும் வரவேற்றதாக கருத்துக்கும் பின்னூட்டலுக்கும் வழிவகுத்ததாகவும் இருந்து நற்பெயரை அடைதல் வேண்டும்.கவணிக்கத்தக்க வகையில் சொற்ப தமிழ் சகோதரர்கள், குறிப்பாக கோகிலா மோகன் எனும் வாசகன்/வாசகி உங்கள் ஊடகத்திலும், இஸ்லாமிய மார்க்கத்தை உங்கள் செய்திகளினூடாக அறிய ஆவலாய் இருந்து முஸ்லிம் மக்களிடம் கேள்விகள் கேட்டதையும், சில கேள்விகளே அப்போது முஸ்லிம் சகோதரரர்களால் பதிலளிக்கப்பட்டிருந்ததையும் நாம் இங்கு ஞாபகப்படுத்தல் வேண்டும்.

ஆக,வாசகர்களை அவர்களது கருத்துக்களுக்களை மதிப்பளித்து இடமளித்து இந்த ஊடகத்தை மேலும் பலமக்களுக்கு சென்றடைய வளர்ச்சியடை வைப்பதா அல்லது இத்தனையும் போதுமென்றளவில் உங்களின் விலாசத்தையும் விசாலத்தையும் சுருங்கவைப்பதா என்பதை ஜப்னா முஸ்லிமே முடிவெடுக்க வேண்டும்.

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.(24:55)

உங்களின் வாழ்க்கை நிலையைப்பொருத்தே உங்கள் மீதான ஆட்சியாளர்கள் நிர்ணயிக்கப்படுகிறார்கள் என்ற இஸ்லாத்தின் மற்றுமொரு கூற்றையும் ஞாபகப்படுத்துகிறோம்.

ஷாஜகான்.

10 comments:

  1. Jaffna Muslim ஜ ஒரு News ஊடகமாக வைத்திருப்பதே சிறந்தது. மார்க்க விடயங்கள் பார்பதற்க்கு ஜமாத்துக்கு ஜமாத் 1000 கணக்கான Web Sites வைத்திறுக்கிறார்கள். Jaffna Muslim இலும் அவைகளைப் போட்டு அரைத்த மாவை மீண்டும் அரைக்கத் தேவையில்லை. எனினும் அரசியல் தகவல்களில் சமநிலை பேனப் படாமை அவதானிக்கக் முடிகிறது.

    ReplyDelete
  2. உண்மை தான் சகோதரா
    முன்பெல்லாம் ஒரு செய்தி பதியப்பட்டு சில நிமிடங்களில் எத்தனை பின்னூட்டம் இப்போது பல நாட்களாகியும் அதன் எண்ணிக்கை 0
    நான் கூட பல பின்னூட்டங்கள் எழுதியுள்ளேன் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட இயக்கம் சார்பான அல்லது பிழயாக அந்த இயக்கம் சார்பானவர்களால் மற்ற இயக்கங்கள் அல்லது அந்த குறிப்பிட்ட இயக்கத்தை தடை செய்துல்ல நாடுகளை விமர்சித்து தவறாக எழுதப்பட்ட தகவல்களுக்கு கொடுக்கும் பின்னூட்டங்கள் வெளிவறாது எனவே நீங்கள் முன்வைத்த சந்தேகத்தை வழுக்கச் செய்கின்றது குறிப்பாக சில நாட்களுக்கு முன் கத்தாரின் சில நயவஞ்சகத்தனமான நடவடிக்கைகளால் சவ்தி மற்றும் சில நாடுகள் அதன் தூதர்களை அழைத்த செய்தி அது வேறுவிதமாக சித்தரிக்கப்பட்ட போது நான் எழுதிய பின்னூட்டம் வெளிவரவில்லை இந்த பின்னூட்டமும் வெளிவறுமா என்பது சந்தேகம்

    ReplyDelete
  3. It's true...I sent several comments and so far not published. Addition to that while translating article from sister languagres, Jaffna News doing lot of modification and deletion.............

    ReplyDelete
  4. This writer has mixed about media with his own way of thinking about Islam. It is a well known fact that Islam is misunderstood religion because everybody think their own group is right. The religious dispute what we face today is newly innovated thing because our forfathers had not faced this type of situation.
    I think the problem arise when an ordinary person try to give religious verdict.
    May Allaah guide us right path to everybody to enter Jennah. Aameen.

    ReplyDelete
  5. when I was comment about Rauf Hakeem appearance during the election campaign and after the election (during the election campaign he appear with a cap and nice beard, after the election, its mean next day of the election he appearing with clean shaved and we could not find that cap also, This is noticeable in every election periods) so, when I was comment about it, jaffnamuslim didn't publish my comments, what’s wrong with you? When the leaders are acting for votes we have rights to blame them. So that blames should reach to him. Maybe he will realize his fault. When you are not publishing our comments mean, you trying to protect some rubbish leaders. This is what you meant.

    ReplyDelete
  6. Brother you told that Jaffnamuslim is supporting Hubbul Awliya and shirk, that is 10% correct, thanks for your good article.

    ReplyDelete
  7. I don't think so they are supporting any political party or religious movement
    if some try to say true things many people not ready to accept that one so
    very rare people can accept true things from my view Jaffna Muslim is more than ok for me if your suspecting them you can reject them let them to do without any troube

    ReplyDelete
  8. தம்பி இஹ்திஸாம் அருமை அருமை உங்களின் தமிழ் அறிவு. நல்ல வாத்தியிடம் தமிழ் படியுங்கள் சகோதரா. ஜஃப்னாமுஸ்லிம் இஸ்லாமிய கட்டுரைகள் பிரசுரிக்கும்படி கேட்கவில்லை. இஸ்லாத்தை கெடுக்கும் கட்டுரைகளுக்கு வரும் சரியான பின்னூட்டங்களுக்கு தடையேற்படுத்த வேண்டாம் என்றுதான் கேட்கிறோம்.

    ReplyDelete
  9. பின்னூட்டம் கொடுத்த அனைவருக்கும்,அதனை இங்கு பிரசுரித்த ஜப்னா முஸ்லிமுக்கும் நன்றி.

    சொல்லவந்த விடயத்தையே தப்புதப்பாய் இங்கேயும் நம் சகோதரர்கள் விளங்கியிருக்கிறமை கவலையை தருகிறது,எப்படித்தான் உங்களை எல்லாம் ...............நம்பகமான மிகவும் பொருப்பு வாய்ந்த ஒரு விடயத்தை உங்களிடம் பொருப்பு தந்தால்...இப்படித்தான் தாருமாறாய் உங்களுக்கு விளங்கியபடி போட்டு தகர்திடுவீர்கள்.

    Raj King, இஹ்திசாமை பற்றீ சொன்ன உதாரணமே என் கவலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

    வாசிப்பும்,கிறகித்தலும் அது ஒன்றும் சும்மா விடயமில்லை,அதற்கென்று கடவுள் ஸ்பெஷலாக அந்த திறனை கொடுக்கவேண்டும்.இல்லாதவர்கள் அவனிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

    மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.