Header Ads



நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்பட்டு விடக்கூடாது - ஞானசார தேரர்


சிங்கள சமூகத்தை பாதுகாக்கவே குரல் கொடுக்கின்றோம். சிங்களவர்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவு பற்றி எங்களுக்கு மட்டுமே தெரியும். அதனாலேயே இவ்வாறு சிங்கள மக்களுக்காக போராடுகின்றோம் என பொதுபல சேனா அமைப்பின் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். பகிரங்க மேடைகளில் பேசி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்.

அண்மையில் நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வட்டருக்க விஜித தேரரை நான் தாக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் பல ஊடகங்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தன.

முட்டாள்களினால் வெளியிடப்படும் ஊடக அறிக்கைகளுக்கும், கருத்துக்ளுக்கும் பதிலளிக்கப் போவதில்லை. கொம்பனித் தெரு பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் உத்தியோகபூர்வமாக இதுவரையில் அவ்வாறான எந்த உத்தரவும் கிடைக்கவில்லை என கலபொடத்த ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Dear Sir:
    Muslims neither dislike Budhists nor Budhism. Also, we never demand a separate land. Hence, your statement is baseless and useless. Infact, you are trying to do a grave danger to the Muslim community in SL. No matter how much planning you make and how many evil actions you perform, pl remember that there is a superpower above you.

    ReplyDelete
  2. சிங்களவர்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவு உங்களுக்கு மட்டுமே தெரியுமென்றால், அதற்கென உள்ள பௌத்த சாசன அமைச்சுக்கும், அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்துங்கள். அதை விடுத்து நேரடியாக தலையிடுவதற்கு நீ யார்? இன்று வரை உனக்கும் உன்னைப்போன்ற காடையர் கூட்டத்திற்கும் பக்கபலமாய் இருப்பது அரசு இயந்திரம்தான் தான் என்பது உலகுக்கே தெரியும். அனாலும் நாம் பொறுமை காக்கின்றோம் ஏன் தெரியுமா. இந்த நாட்டில் உள்ள பௌத்த சிங்கள மக்களில் 95 வீதமானோர் உன் அடாவடித்தனத்தையும் அதற்கு துணை போகும் அரச இயந்திரத்தையும் வெறுக்கின்றார்கள். ஆனாலும் அராஜக அரச இயந்திரத்தினால் தமக்கும் தமது உறவுகளுக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று அமைதி காக்கின்றனர். அவர்கள் உணர்வை நாமும் மதிக்கின்றோம். அநியாயமாய் தலை விரித்தாடிய இயக்கங்கள் அழிந்தது போல்....

    ReplyDelete

Powered by Blogger.