Header Ads



நவநீதம் பிள்ளையின் 'நாயும்' இலங்கைக்கு வரமுடியாது - அமைச்சர் நிமல் சிறிபால சில்வா

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.  நவிபிள்ளை அல்ல அவரது நாய்கூட இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு நாம் இடமளியோம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார். 

பதுளையில் 06-04-2014 நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது ஜெனிவா பிரேரணை உள்ளது. ஏன் நாம் அதனை எதிர்க்கின்றோம். எமக்கென்று மகத்துவம் உள்ளது. நாட்டிலுள்ள உள்ளக விவகாரங்களில் வெளித் தரப்பினர் தலையீடு செய்வதை நாம் விரும்பவில்லை. அதற்கு இடமளிக்கவும் மாட்டோம்.

எமது வீட்டில் பிரச்சினை இருந்தால் நாமே அதற்கு தீர்வு காண வேண்டும். எமது நாட்டில் பிரச்சினை இருந்தால் நாமே அதற்கும் தீர்வினை காண வேண்டும். இதன் காரணமாகவே மேதகு ஜனாதிபதியும் எமது அரசாங்கமும் சர்வதேச சதிகளுக்கு எதிராக அந்தப் பிரேரணைக்கு எதிராக ஜெனிவாவில் போராடினோம்.

நவிபிள்ளை அம்மையார் அல்ல அவரது நாய்கூட இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு நாம் இடமளியோம் என்பதை இலங்கையிலும் மிகத் தெளிவாக கூறியுள்ளோம். ஏனெனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாட்டின் சுயாதீனத்தன்மை, இறைமை, மற்றும் மகத்துவத்தை பாதுகாப்பதற்கும் நாட்டின் அபிமானத்தை பாதுகாப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஒருவரவார்.

1 comment:

  1. Appadiya amaichar awarhale!
    Meeri wanthal enna seyveerhal

    ReplyDelete

Powered by Blogger.