தந்தையின் உயிரை காப்பாற்றிய மகன்!
பனிப் பாறையில் சிக்கிய தந்தையை காப்பாற்ற, பல மைல் தூரம் சைக்கிளில் சென்று, அமெரிக்க சிறுவன், உதவி கோரியுள்ளான்
அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள, டாஹோ ஏரி, தற்போது பனியால் உறைந்துள்ளது. பொருட்களை கொண்டு செல்லும் வண்டியை இயக்குபவரான, ஜான் டெய்லர் பியர்டினோ, கடந்த வாரம், தன் மகன், போடே பியர்டினோவுடன், இந்த ஏரியை கடந்து சென்றார். அப்போது, திடீரென, போடேவின் தந்தை சென்ற வண்டி, விபத்துக்குள்ளாகி, பனிப்பாறைகளுக்கு இடையில், சிக்கியதால், ஜானுக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய தந்தையை மீட்க, உதவிக்கு அழைக்க, அப்பகுதியில் யாரும் இல்லை. 'சிக்னல்' கிடைக்காததால், மொபைல் போன் வேலை செய்யவில்லை. திசை தெரியாத நிலையில், தன்னிடம் இருந்த சைக்கிளில், பல மைல் தூரம் சென்ற சிறுவன் போடே, அவ்வழியே வந்த சுற்றுலா குழுவினரிடம் விவரத்தை தெரிவித்து, அவர்கள் உதவியுடன் மீட்புக் குழுவுக்கு தகவல் கொடுத்தான். தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், சிறுவனின் தந்தையை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். தந்தையை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, தன் தாய்க்கு தகவல் தெரிவித்தான். ''போடேயின் சமயோசித காரியத்தால், அவன் தந்தையை காப்பாற்ற முடிந்தது,'' என, அவன் தாய் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
Post a Comment