Header Ads



பிரசவம் எனும்போது குசுமாவத்தியும், லஷ்சுமியும், பாத்திமாவும் ஒன்றுதான் - மகப்பேற்று அதிகாரி நாவாஸ் ஜிப்ரி

(இக்பால் அலி)

தோட்டத் தொழில் துறையில் ஈடுபடுகின்ற மலையகக் கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களுடைய பிரசவங்களின் போது ஏனைய பெண்களை விட சிறந்த உடல் ஆரோக்கியமான  நிலையை உடையவர்களான உள்ளனர். இவர்களிடையே  குறைவான உயிர் இழப்பு விகிதங்களே இடம்பெறுகின்றன. அதுவும் போக்குவரத்து ரீதியாக ஏற்படும் தடங்கல் காரணமாகவே நிலவுகின்றன  என்று கம்பளை பிரதான வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியதிகாரி நாவாஸ் ஜிப்ரி தெரிவித்தார்.

எம். ஜே. எஸ். நிறுவனத்தின் அனுசரணையுடன் கஹவத்த தோட்டக் கம்பனியின்  ஏற்பாட்டில்  தோட்டத் தோழிலாளர்களை கௌரவிக்கும் விழா கண்டி ஏல்ஸ் ரீஜன்ஸ் ஹோட்டலில் இவ்வமைப்புக்களின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜ விரேன் ருபேரு பிரதான முகாமையாளர்  சமிந்த குனரத்ன  தலைமையில் 03-04-2014 நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட கம்பளை பிரதான வைத்திய சாலையின் மகப்பேற்று வைத்தியதிகாரி நாவாஸ் ஜிப்ரி அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

இந்தப் பெண்கள் சோர்வின்றி மலை முகடுகளில் ஏறி கடுமையாக உழைப்பதன் காரணமாக பிரசவ காலத்தின் போது இவர்களுடைய உடம்பு மிகுந்த ஆரோக்கியமான நிலையைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன் தினசரி அவர்கள் காணுகின்ற இயற்கை அழகின் தோற்றம் கர்ப்பிணித் தாய்மாகுகளுக்கு மிககுந்த சிறந்த சுகாதார சுற்றுச் சூழலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. தேசிய ரீதியில்  இலங்கையில் இடம்பெறும் தாய்மார்களுடைய பிரசவம் தொடர்பாக  நான் வெளிநாட்டில் மருத்துவ உயர் கல்வி கற்கை நெறியைப் பூர்த்தி செய்வதற்காக மேற் கொண்ட ஆய்வின் போது அறிந்து கொள்ள முடிந்தது.

மருத்துவ சேவையைப் பொறுத்தவரையில் இலங்கையில் எந்தப் பாகுபாடுகளுமின்றி மேற்கொள்ளப்படுகின்றன. பிரவசம் எனும் போது குசுமாவத்தியும் ஒன்றுதான், லக்ஷசுமியும் ஒன்றுதான் பாத்திமாவும் ஒன்றுதான் என்று வைத்திநிபுணர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அரச தோட்ட உத்தியோகஸ்தர்கள், தோட்ட தொழிற் சங்க உத்தியோகஸ்தர்கள் கம்பனி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.