Header Ads



நெற்றியில் கொம்பு முளைத்த சீன பாட்டி

சீனாவை சேர்ந்த, 101 வயது பாட்டியின் நெற்றியில், திடீரென கொம்பு வளர்ந்ததால், அவருடைய குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். சீனாவின், ஹூனான் மாகாணத்தில் உள்ள, லின்லோ கிராமத்தில் வசிப்பவர் ஜாங் ருய்பெக், 101. 

கவலை : ஏழு குழந்தைகளுக்கு தாயான இவரது நெற்றியில், கடந்த ஆண்டு, லேசான வீக்கம் ஏற்பட்டதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாளடைவில், 6 செ.மீ., நீளமுள்ள கொம்பாக வளர்ந்ததும், இவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். தற்போது, நெற்றியின் இடது பகுதியிலும் வீக்கம் தோன்றியுள்ளதாகவும், விரைவில் கொம்பாக வளரும் என, ஜாங்கின் கடைசி மகள், ஜாங் குவாஜெங், 60, தெரிவித்துள்ளார். தோலில் ஏற்படும் மாற்றத்தால் இவ்வாறு தோன்றுகின்றன. வயதானவர்களுக்கு தோன்றும் இந்த கொம்பு, தலைமுடி மற்றும் நகங்களைப் போன்று, "கெரட்டின்' என்ற வேதிபொருளால் ஆனது.

சிகிச்சை : சாதாரண சதை வளர்ச்சி என்றால் தீங்கற்றது. புற்றுநோய் வளர்ச்சி என்றால், உடனடியாக, அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும். மருக்கள், தோல் புற்றுநோய், செதில் தோல் திட்டுக்கள் போன்றவை இவ்வாறு வளர்கின்றன. "அறுவை சிகிச்சை செய்து, இந்த கொம்புகளை அகற்றினாலும், அவை உருவாவதற்கான காரணம் தெரியவில்லை' என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.