Header Ads



மதீனா மலர் கண்காட்சியில் மக்களை கவர்ந்த மலர் கம்பளம்

அரபு நாடுகளின் ஒன்றான மதீனாவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டும் மன்னர் ஃபஹ்த் மத்திய தோட்டத்தில் நடைபெற்ற கண்காட்சியை மதீனா கவர்னரும் இளவரசர்களில் ஒருவருமான ஃபைசல் பின் சல்மான் தொடங்கி வைத்தார். 

இந்த கண்காட்சியை பார்வையிட மதீனாவின் சுற்றுப்பட்டில் உள்ள முக்கிய நகரங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். சிறந்த மலர் அலங்காரம், மலரினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் அடங்கிய ‘ஸ்டால்’கள் அமைக்கப்பட்டிருந்தன.

கண்கவரும் கலை நிகழ்ச்சிகள், பரிசுப் போட்டிகள் என்று களைகட்டிய இந்த கண்காட்சியின் எழிலை சிறப்பான முறையில் தங்களது கேமராக்களில் சிறைபிடித்தவர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன. 

அரபு நாடுகளில் இலையுதிர் காலத்துக்கு விடையளித்து, வசந்த காலத்தை வரவேற்பது போல் அமைந்த இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கான வண்ண மலர்களால் தொடுக்கப்பட்டிருந்த மலர் கம்பளம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக அமைந்திருந்தது.

அடுத்த ஆண்டு இதைவிடப் பெரிய இடத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று மதீனா நகர தோட்டக்கலை இயக்குனர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.