Header Ads



கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக..!

( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு ஆங்கில மொழிமூலம் தோற்றிய சகல மாணவர்களும் சித்தியடைந்து க.பொ.த.உயர்தரம் கற்பதற்கான  தகுதியினைப் பெற்றுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய 9 மாணவர்களுள் ஜே.ஐ.அஹமட் ஸஹ்ரி 9 பாடங்களிலும் ” ஏ” சித்தியும் , எம்.எம்.ஆபித் அஹமட் 8 பாடங்களில் ” ஏ” சித்தியும் பெற்றுள்ளதுடன் ஏ.நுபைர் அஹமட் , ஏ.ரீ.றஹுபத் ஸரூஸ் தாஹா , எம்.ரீ.எம்.சராபத் அப்ஸான் , எம்.டபிள்யு.எம்.சிப்லி உமர் பாறூக் , எப்.ஏ.பயாஸ் அஹமட் , ஏ.ஜே .ஜபீர் , எம்.எஸ்.அஹமட் சப்னி ஆகியோர் சகல பாடங்களிலும் சித்தியும் பெற்றுள்ளனர்.

இவ்வாறான பரீட்சை பெறுபேறுகளைப் பெறுவதற்கு காரணமாக அமைந்த முன்னாள் ஆங்கில மொழிமூல பகுதித்தலைவரும் ஆங்கில மொழிமூல பொறுப்பு உதவி அதிபருமான எம்.எஸ்.அலிகான் , கல்லூரின் முன்னாள் அதிபர் ஏ.ஆதம்பாவா , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் , தற்போதய அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் ஆகியோருக்கு ஆங்கில் மொழிமூல பகுதித் தலைவர் ஏ.பி.ஷெரோன் டில்ராஸ் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை தமிழ் மொழி மூலம் தோற்றிய 10 மாணவர்கள் இதுவரை 9 பாடங்களிலும் ” ஏ” சித்தி பெற்றுள்ளதாகவும் இந்த முடிவில் அதிகரிப்பு ஏற்படாலாம் எனவும் அம் மாணவர்கள் பற்றிய விபரங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் எனவும் பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் கலசம்.கொம் செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார். 

1 comment:

Powered by Blogger.