ஜாதிக பல சேனாவின் ஆவணங்களை, பொலிஸில் ஒப்படைத்துள்ள பொதுபல சேனா
ஜாதிக பல சேனாவிடம் இருந்து எடுத்துச் சென்ற ஆவணங்களை பொதுபல சேனா தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் 21-04-2014 இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஜாதிக பல சேனா ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிற்குள் பலவந்தமாக புகுந்து பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பினர் குழப்பினர்.
அத்துடன் ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரெக்க விஜித தேரரை அச்சுறுத்திய ஞானசார தேரர் அங்கிருந்த ஆவணங்களை பறித்துச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் தமது ஆவணங்கள் என எண்ணி அவற்றை தாம் எடுத்துச் சென்று விட்டதாக பொதுபல சேனா அமைப்பு கூறியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றபோதே பொலிஸார் இதனை குறிப்பிட்டனர்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், தம்மை அச்சுறுத்தி ஊடக சந்திப்பை குழப்பியதாக விஜித தேரரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலுக்கு அஞ்சியே தான் மன்னிப்பு கோரியதாகவும் அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
Post a Comment