ஞானசார தேரரின் சவாலை சந்திக்க ரவூப் ஹக்கீம் தயார்..!
ஒழுங்காக நெறிப்படுத்தப்பட்டு , வார்த்தைப்பிரயோகங்களில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட்டால் நேரில் எந்த இடத்திலும் விவாதத்திற்கு முகம்கொடுக்க முடியும் .
தற்போது தோற்றமேடுத்துள்ள முஸ்லிம் விரோத போக்கு குறித்து பேசப்பட்டாக வேண்டும் .பெரும்பான்மை சமுகத்த்தினரின் மத்தியில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிரான விசமப் பிரச்சாரங்களை விதைக்கும் அணியினரின் விவாதத்திற்கான சவாலை ஏற்றுக்கொள்கிறேன் .
நடுநிலை வகிக்கும் ஊடகமொன்று , மிகவும் பொருத்தமான மத்தியஸ்தர்களுடன் நேர்மையாக இவ்விவாதத்தை நடத்த ஒழுங்குகளை மேட்கொள்ளுமாயின் ஞானசாரரின் சவாலை சந்திக்க தான் தயார் என்று ரவூப் ஹகீம் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாக பிரபல சிங்கள தினசரியான “ மவ்பிம “ தெரிவித்துள்ளது .
விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் அமைப்பினரின் நடத்தை , வார்த்தைப்பிரயோகங்கள் என்பனவற்றை கருத்தில் எடுத்து நோக்கும்போது அவர்கள் ஒரு நேரடி விவாதத்தின்போது ஒழுக்கசீலர்களாக நடந்துகொள்வார்களா என்கிற பலமான சந்தேகம் எழுகிறது .
நாட்டின் பெரும்பான்மை முஸ்லீம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சியொன்றின் தலைவர் என்கிற ரீதியில் மிகவும் பொறுப்புணர்வுடனும் ,பொறுமையுடனும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது . பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்ததாக வேண்டும் , அதேவேளை தீவிரவாத நோக்கங்களுடன் , ஒரு இனமுறுகளை தோற்றுவிப்பதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ள குழுவினருடன் நேரடி மோதலில் இறங்கும்போது அதன் எதிர்விளைவுகள் குறித்த எச்சரிக்கையுடன் மிகவும் சாதுர்யமாக நிலைமைகளை கையாள வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது .அதனால்தான் சங்கைக்குரிய மகாநாயக தேரர்மாரை கண்டியில் சந்தித்து இதுபற்றி விளக்கமாக பேசியுள்ளேன் .
நூற்றாண்டுகாலம் பழமை மிகுந்த பௌத்த – முஸ்லிம் உறவுகளில் விரிசல்களை உண்டுபண்ணாதவிதமாக மிகவும் பொறுமையுடனும் புத்திசாதுர்யத்துடனும் இவற்றை அணுகுமாறு சங்கைக்குரிய தேரர்கள் எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள் . நேரடி மோதல்களின் விபரீதம்பற்றி அவர்கள் தெரிவித்த ஆழ்ந்த கவலையையும் தேர்ந்த ஆலோசனைகளையும் இதுவிசயத்தில் நாம் கட்டாயம் கவனத்தில் எடுத்தாக வேண்டியுமுள்ளதாக அப்பத்திரிகையுடனான நேர்காணலில் ஹகீம் மேலும் தெரித்ததாக அச்செய்தி குறிப்பிடுகிறது .
ஒரு நாடகத்திற்கு இரண்டு சிறந்த நடிகர்கள்.....!!!
ReplyDeleteAKRAM ORU MANIDANIN KURAI TEEDUWADAI VTTU VTTU NIRAI KAANA PALAKIKKOLLUN GAL ULAKIL KURAI ELLADA ORU MANIDANAI UNGALAAL KAATTA MUDIYUMA
ReplyDeleteகௌரவ அமைச்சர் அவர்களுக்கு எனது பணிவான ஆலோசனை
ReplyDeleteவிவாதம் செய்வதற்கும் ஒரு தராதரம் வேண்டும் அவனுடைய தரம் என்ன? உங்கள் தரம் அந்ஸ்த்து என்ன? இப்படிப்பட்ட தரம் கெட்ட தெரு நாய்களுடன் எல்லாம் தாங்கள் விவாதம் செய்வது அறவே தேவையற்ற விடயமாகும் இதனால் உங்களுக்கோ உங்கள் சமூகத்திற்கோ எவ்வித பலனும் கிட்டப் போவதில்லை. அவன் நம் சமூகத்தின் ஆக அடிமட்டத்தில் உள்ள அறவே படிப்பறிவற்ற ஒரு பாமர மகனுடன் விவாதிப்பதற்குக் கூட தகுதியற்றவன்.
கண்ட கண்ட குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் தாங்கள் பதில் சொல்லி காலத்தை வீணாக்காது உங்கள் பணியைத் nhதடருங்கள்
அவன் உங்களுடன் விவாதிக்க வேண்டும் என்றால் முதலில் அவனை உங்கள் தரத்திற்கு கல்வி கற்று உங்’களைப் போல் ஒரு அமைச்சர் எனும் அந்தஸ்த்துடன் வாடா விவாதிப்போம் என்று ஒரு அறிக்கையை மட்டும் கொடுத்து விட்டு உங்கள் வேலையைப் பாருங்கள்
இதுதான் உங்கள் அந்தஸ்த்துக்குப் பொருத்தமானது என எண்னுகின்றேன்
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்.
இது தான் உண்மை
ReplyDeleteஉங்களை யும் சமூகத்தையும் அவமானப் படுத்தும் நோக்கிலேயே இந்த களிசறை(ஞான சார) உங்களை விவாதத்திற்கு அழைக்கிறான், இவனுகளுக்கு எந்த பெறுமதியும் கொடுக்கும் வேலையை நீங்கள் செய்ய வேண்டாம்.
ReplyDeleteMr. THALIP ,.... 'தலைவர்' ரவுப் ஹக்கீம் அவர்கள் ஒரு சிறந்த நடிகர்தான்... அதில் எந்தவித சந்தேகமுமில்லை. குறிப்பாக நடந்து முடிந்த மாகாண சமைத்தேர்தலில் அவர் நடித்த நடிப்புக்கு 'சிறந்த நடிகசுக்கான விருது' வழங்கப்பட வேண்டும். இவர் மட்டுமல்ல..... இவரைப்போன்று இன்னும் பலபேர்.... சுயநலத்துக்காக தமது சொந்த மக்களை புறக்கனித்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் தூங்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து 'நடிகர்கள்' என்று சொல்லாமல் என்ன வென்று அழைப்பது. எது எப்படியோ... அரசியல் ஒரு சாக்கடை. அதில் கால் பதித்தவர்கள் எடுக்கவும் முடியாமல் கழுவவும் முடியாமல் இருப்பார்கள். இவர்கள் விதைத்த விதைகளை இவர்களே அறுவடை செய்யப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
ReplyDelete