வீராவேசங்கள் பேசும் கடிவாளமிடப்பட்ட போலி முகவர்கள், எதிரியைவிட ஆபத்தானவர்கள் ..!
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
இனத்துவ,தனித்துவ அடையாள அரசியல் இலங்கை முஸ்லிம்கள் மீது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன் திணிக்கப்பட்டதுஎன்று கூறலாம் அது அன்று ஒரு அத்தியாவசிய தீமையாக இருந்தது.
எனினும் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் மக்களாணை பெற்ற எந்தவொரு உரிமைப் போராட்டத்திலும் வெற்றிபெறவில்லை என்பதே உண்மை.
போராட்ட அரசியல் சூதாட்ட அரசியலாக மாறி இன்று பிச்சை வேணாம் நாயைப்பிடி என்ற சரணாகதி அரசியல் என பெயர் பெற்றுள்ளது.
இன்று இனவாதமும் மதவாதமும் இலங்கையில் தேசிய அரசியல் எல்லைகளுக்கு அப்பால் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் நகர்வுகளுக்காகாவும் சந்தைப் படுத்தப் படுவதால் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் முஸ்லிம் அரசியற் குழுக்களுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
சர்வதேச நெருக்குவாரங்களுக்கும் உள்நாட்டில் ஆட்சிமாற்றம் ஒன்றிற்காக அமெரிக்க தலைமையில் மேற்கொள்ளப் படும் மேலைத்தேய நகர்வுகளுக்கு முகம் கொடுப்பதற்காகவும் உள்நாட்டில் பேரினவாதத்தையும் மதவாதத்தையும் சந்தைப் படுத்த வேண்டிய தேவை அதிகார வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டில் இனமத வெறியர்களை கூலிக்கு அமர்த்தி மீண்டும் ஒரு முறை இந்த நாட்டை மூன்றாம் முறுகல் நிலையொன்றுக்குள் தள்ளவும் குறிப்பாக தமிழர் தரப்பிற்கு வலு சேர்க்கவும் ஆயுதக் கலாச்சாரத்தை சந்தைப் படுத்தவும் சர்வதேச சதிகாரர்கள் மேற்கொள்கின்ற முயற்சிகளின் புதிய இலக்காக முஸ்லிம்களை காட்சிப் படுத்தவும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பயங்கரவாதம் என்ற இஸ்லாமோபோபியாவை இங்கு அறிமுகம் செய்யவும் எடுக்கப் படுகின்ற அதே முயற்சிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அதிகார வர்க்கம் காய்களை நகர்த்துவதாக தெரிகிறது.
போலியான இன மத நேசர்களை காவலர்களை போசிக்கும் அதிகார வர்க்கம் அவர்களை பிரபல்யப் படுத்துவதற்கும் அவர்களுக்கான ஆதரவு தளத்தை அதிகரிப்பதற்காகவும் தமது கட்டுப் பாட்டில் உள்ள சராணகதி முஸ்லிம் இனத்துவ அரசியல் வியாபாரிகளை ஏட்டிக்குப் போட்டியாக களமிறக்கும் ஆபத்தும் இப்பொழுது உணரப் படுகிறது.
அரசியற் குழுக்களுக்கு அப்பால் முஸ்லிம்களது காவலர்களாக வேறு சில குழுக்களை ஊக்குவிப்பதும் அதிகார வர்க்கத்தின் நிகழ்சி நிரலில் இருக்கிறதா என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.
தமிழர்களாயினும் சிங்களவராயினும் முஸ்லிம்களாயினும் இன மத வெறியும் மூன்றாம் முறுகல் நிலையயும் மொத்த தேசத்தினதும் , இறைமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும்,அமைதிக்கும் சமாதானத்திற்கும், சகவாழ்விற்கும் ஸ்திரத்தன்மைக்கும், பாதுகாப்பிற்கும்,அபிவிருத்தியிற்கும் விடுக்கப் படும் சவால் என்பதால் முஸ்லிம்களின் போலி முகவர்களுக்குப் பின்னால் சமூகம் ina மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் உணமியான தேசப் பற்றாளர்களுடன் பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பானமையான நல்லவர்களுடன் கை கோர்த்து அரசியல் இராஜதந்திர நகர்வுகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
Dear Masihudeen, where is your soora comity? What it’s doing, still in deep sleep? You all good to write an article in news papers only, you blaming the politicians now, so, what you and your soora comity doing now? you also doing the same as politicians doing. Try to come out and interfere in our community problems and do something legally, don’t just be blame others and be like a politicians.
ReplyDeleteகண் கெட்ட பிண் சூரிய நமஸ்காரம்.... பாவம் மஸிகுத்தீன் இனாமுல்லா இப்பொழுதுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளித்தெழுந்திருக்கிறார்.
ReplyDelete