மாணவி ஏ.ஏ.எப். நிப்லா ”எழுதிய எம்மைச் சுழவுள்ள மூலிகைகள் ஓர் அறிமுகம்”
(ஏ.பி.எம். அஸ்ஹர்)
சம்மாந்துறை கோல்டன் சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் அம்பாறை, மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் மகா வித்தியாலய மாணவி ஏ.ஏ.எப். நிப்லா ”எழுதிய எம்மைச் சுழவுள்ள மூலிகைகள் ஓர் அறிமுகம்” எனும் நுால் வெளியீட்டு விழா வித்தியாலய ஹூஸைன் ஞாபகார்த்த ஆராதனை மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன் தமைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை சுற்றாடல் அதிகாரசபையின் மாகாணப் பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ.சி. நஜீப் பிரதம அதிதியாகவும், அம்பாறை ஆயுர்வேத வைத்தியசாலை மாவட்ட வைத்தியஅதிகாரி எம்.சி.ஏ. காலீத், லயன் கழக ஜி.எல. ரி. இணைப்பாளர் லயன் எஸ.எம்.இப்றாலெவ்வை, கொப்சோ நிறுவனத்தின் பணிப்பானர் ஏ.ஜே. காமில் இம்தாத் ஆகியோர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதன் முதற்பிரதியினை சமாதானத்திற்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸ் நுாலாசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
Post a Comment